பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள்

171

செல்வமும் சிக்கனமும்

கடிதம்

- 29

லண்டன், ஜனவரி 10. 1749.

உனது டிசம்பர் 31ஆம் நாளைய கடிதம் பெற்றுக் கொண்டேன். நான் அனுப்பிய பரிசு உனது நன்றியறிதலுக் குரியதா யிருந்தது கண்டு மகிழ்ச்சி. உண்மையில் அப்பரிசின் மதிப்பு அந் நன்றி யறிதலின் மதிப்புக்குக் குறைந்ததாயினும், அதை நீ நன்கு பயன்படுத்திக் கொண்டாய் என்று கேட்டால் நான் இன்னும் மகிழ்ச்சியடைவேன்.

இப்போது நீ உலக வாழ்க்கையில் முன்னிலும் அதிகமாக ஈடுபட்டிருக்கிறாய். அங்ஙனம் ஈடுபடுவதற்காகவே உன் கைச் செலவுப் பணத்தை அதிகமாக்குகிறேன். இது தவிர அவசிய மென்று நான் நினைக்கும் செலவுகளையெல்லாம் அதிகப்படி யாகவே நான் ஏற்றுக்கொள்வேன்.

ஓரளவு உன் செலவினங்கள் இனி உன் விருப்பத்தையே பொறுத்ததாதலால் செலவிடும் உன் உரிமையை நீ எவ்வாறு பயன்படுத்துவது நன்மை தரும் என்பதைப் பற்றிச் சில செய்திகள் கூற விரும்புகிறேன்.

உனது மேம்பாட்டுக்கு, உன் நல்வாழ்க்கையின் நல்லின் பங்களுக்கு வேண்டிய பொருள்கள் எவற்றையும் நீயும் தாராள மாய்ச் செலவு செய்யலாம். நானும் தங்குதடையின்றி அனு மதிப்பேன்.மதிப்பாக வாழ்வதற்கு வேண்டிய தங்கவிடம், உடை, தட்டுமுட்டுச் சாதனங்கள், நல்ல நூல்கள், போக்குவரவுச் செலவுகள் ஆகிய யாவும் என் கணக்கில் உன் மேம்பாட்டுக்கான செலவுகளேயாகும். நல்லின்பங்கள் என்று நான் குறிப்பவை யாதெனில்; வறுமையாலும் இடைஞ்சலாலும் தொல்லைப்படும் நண்பர், நன்மக்கள் ஆகியவர்கட்கு உதவிசெய்தல்; அறச்