பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள்

173

கணக்கு எழுதுவதில் உருப்படியான செலவுகளை மட்டும் எழுது.மற்றவற்றை சில்லறைச் செலவு என்று இறுதியில் மொத்த மாகச் சேர்த்தால் போதும். சிறு செலவுகள் குறிக்கும் நேரம் அதன்பயன் நோக்க வீண்நேரம் ஆகும். அதுவும் உலோபிக் குணத்தின் ஒரு பயனாகும்.

மொத்தத்தில் செலவு என்பது நல்வாழ்வு முதலிய வாழ்க்கைப் பயன்களின் வரவை எதிர்நோக்கிச் செய்யும் நல் வாணிகமேயன்றி வேறன்று. செலவில்லாத வரவோ, வரவில்லாத செலவோ கிடையாது என்பதை உணர்பவன் வீண் செலவுக்கு ஆளாகான். கடன்மூலம் பொய்யான வரவுக்கும் ஆளாக மாட்டான். வரவு செலவு என்பது உண்மையில் உலகில் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பண மூலம் பரிமாறிக் கொள்வதன்றி வேறன்று. வேறு பயனெதுவும் உண்மையி லில்லாமல் இன்பத்துக்கு அல்லது மதிப்புக்கு ஒருவன் செலவு செய்தால் அது வீண் செலவே - அவ்வின்பம், அல்லது மதிப்பு வாழ்க்கையை உயர்த்தும் பயனை வரவாகக் கொண்ட இடத்தில் மட்டுமே அது செலவாக அனுமதிக்கத்தக்கது.

இயல்பாகவே சிக்கனமுடைய உனக்கு எது செலவு செய்யக் கூடாதென்று மிகுதி கூறவேண்டுவதில்லை. எது செலவிட வேண்டியது என்பதே வற்புறுத்திக் கூறவேண்டுவதாகும்.நலம்.

உனதன்புள்ள,