பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள்

175

ஆளாய் வந்தேன். தானாக ஆராய்வதிலும் பிறரிடம் கேட்பதிலும் சோம்பல் தடையாயிற்று. சில சமயம் எல்லாரும் கொண்ட கருத்து நாகரிகக் கோட்பாடாதலால் அதுபற்றிக் கேட்பது தவறு என்று எண்ணினேன். ஆனால், நான் ஆராய்ச்சி செய்யத் தொடங்கியவுடன் நான் முன் கொண்டிருந்த பல கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்று கண்டேன்.

குருட்டு நம்பிக்கைகள் பல என்னிடமிருந்தன. குருட்டு நம்பிக்கை என்னும்போது சிறு பிள்ளைகள் நம்புகிற பூச்சாண்டி, பேய், மந்திரவாதம் ஆகியவற்றை நான் குறிப்பிடவில்லை. வயது வந்தவர்களிடையேயும் அறிஞர்களிடையேயும் கூட ஆராயாது ஏற்றுக்கொள்ளப்படும் முடிவுகளையே குறிப்பிடுகிறேன்.

இக் குருட்டு நம்பிக்கைகளில் ஒன்று, எல்லா அறிவும் எல்லா உயர்வும் கிரேக்க நாகரிகத்துடன் ஓய்ந்தழிந்து விட்ட என்பதே. கிரேக்க இலக்கிய ஆர்வத்தாலும் அவற்றைப் பற்றிய தற்கால மதிப்புரைகளாலும் எழுந்த எண்ணமே இது. அதன்பயனாக சென்ற 2500 ஆண்டுகளாக உலகில் எத்தகைய அறிவுமுன்னேற்றமோ ஒழுக்க உயர்வோ கிடையாதென்று மனப்பூர்வமாக நம்பினேன். ஹோமர், வர்ஜில் முதலிய பண்டைய கிரேக்க, இலத்தீனக் கவிஞர்களிடம் கறையேயிருக்க முடியா தென்றும்; மில்டன், டாஸோ முதலிய தற்காலக் கவிஞர்களிடம் அவர்கள் சிறப்புடனொத்த சிறப்பே இராது என்றும் எண்ணினேன். இலக்கியத்துறையில் மட்டும் இவ் வெண்ணமிருந்தால் அத்தனை கேடில்லை. இலக்கியத்தைப் போலவே நாகரிகம், அரசியல், அறிவியல் ஆகிய எல்லாவற்றிலும் தற்கால ஐரோப்பிய நாகரிகம் மிகக் கீழ்த்தர மானதென்று எண்ணினேன். இது எவ்வளவு பிழையான எண்ணம் என்று இன்று அறிகிறேன்.

சமயத் துறையிலும் என் நாட்டினர் சமயமாகிய ஆங்கிலிகக் கோட்பாட்டை (கிறிஸ்துவ சமயத்தின் ஆங்கில நாட்டுக் கிளைச் சமயத்தை) முழு உண்மை வாய்ந்த தென்றும் மற்றவை பொய்யா னவை என்றும் நான் எண்ணினேன்.நான் எண்ணுவதுபோலவே அவ்வச்சமயத்தவரும் எண்ணியிருப்பர் என்பதை உணராது, அவர்கள் பொய்மையைப் பிடிவாதமாக நம்புகிறார்கள் என்று சீறினேன். அவரவர் தத்தம் சமயத்தை உண்மையாக நம்புமிடத்து