(176) ||
அப்பாத்துரையம் - 27
எதனையும் குறைகூறாது ஒப்புரவுடன் நடப்பதே நமது உண்மைப் பற்றுக்கு நாம் தரும் மதிப்பு என்பதை இப்போது உணர்கிறேன்.
இவற்றைவிட நடைமுறையில் கேடு தரும் மற்றொரு நம்பிக்கை உயர் குடியினர் பின்பற்றுவதெல்லாம் நாகரிகத்தின் இன்றியமையாக் கூறுகள் என்று நான் நம்பியதேயாகும். இங்ஙனம் பலரும் கூறுவது கேட்டு என் ஆராயா முடிபு வலுப்பெற்றுவந்தது. ஒழுக்கமின்மை, குடி, புகை குடித்தல், வீண்செலவு ஆகியவையில்லாமல் நாகரிகம் இருக்க முடியாது என்று எண்ணினேன். இத் தீமைகளனைத்தும் இருந்தும்கூட நாகரிகம் அவற்றைக் கணிக்கச் செய்யும் அளவுக்கு உயர்வுடையது என்று மட்டும் இப்போது நான் நம்புகிறேன். நாகரிகத்தின் கவர்ச்சியிலீடுபட்டு உயர்வுற்ற மக்கள் தம் உள்ளார்ந்த குறைபாடுகளையும் அதனுடன் சேர்த்துக்கொண்டு பகட்டு கிறார்கள் என்பது இப்போது எனக்கு விளங்குகிறது. குடி, புகை குடித்தல் ஆகியவை இல்லாவிட்டால் நாகரிகம் ஒரு சிறிதும் கெடாது என்பது மட்டுமன்று; அது மாசு நீங்கிய பத்தரை மாற்றுப் பொன் போல் இன்னும் ஒளி வீசத்தக்கது. அவற்றை இன்று மக்கள் புறக்கணிப்பதெல்லாம் தேனில் உள்ள புழுக்களைப் புறக்கணித்து அவற்றுடனேயே தேனை உண்பது போன்றதே.
நாகரிகம் அடிமைத்தனம் அன்று; நாகரிகத்திலும் அடிமைப் பட்டவன் பிறர் 'நாகரிகம்' என்று கூறுவதை மேற்கொண்டவனன்றி நாகரிகம் வளர்ப்பவனோ, நாகரிகத்தில் பங்கு கொள்பவனோ ஆகமாட்டான். தீய பழக்கங்களைப் பிறர் மதிப்புக்காக நாகரிகமாக மேற்கொள்பவர் அவ்வப்போது அதே பிறர் அவற்றை மதியாது ஏளனம் செய்வதைக் காணலாம். அவர்கள் அதை ஏற்பதாகக் காட்டிக்கொள்வதெல்லாம் தம் குறையை மறைப்பதற்கே யன்று, அது குறையன்று என்று எண்ணுவதாலல்ல; தம்மினும் அவ்வக் குறையை மிகுதியாக உடையவரை அவர் ஏளனம் செய்வதிலிருந்து இதை உணரலாம்.
எனவே அறிவு வளர்ச்சியையும், உண்மையான நாகரி கத்தையும் நீ நாடினால் உன் பகுத்தறிவைப் பயன்படுத்து; அதனையே நிமிர்ந்து வற்புறுத்து. பலருக்காக ஒப்புரவு செய்; பகுத்தறிவைப் பறிகொடுத்துப் பொய்யுரை மேற்கொண்டு