பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள்

177

பசப்பாதே. வேறு எதனில் சோம்பலுக்கு இடங் கொடுத்தாலும், முயற்சி எடுத்துக்கொள்ளத் தயங்கினாலும், சிந்தனையை மேற்கொள்வதில் சோம்பலும் தயக்கமும் கொள்ளாதே.

கற்றவர், நாகரிக மக்கள் ஆகியவர்களிடம் பல நம்பிக்கைகள் படிந்திருப்பதுபோலவே, நாடு, உலகு ஆகிய துறைகளிலும் நம்பிக்கைகள் படிந்திருப்பது உண்டு. உலகில் சமயங்கள், கட்சிகள், கோட்பாடுகள் ஆகியவை பகுத்தறிவு மூலம் பரவுவதைவிட, மூட நம்பிக்கைகள், தன்னலங்கள் ஆகியவற்றின் மூலமே பரந்துள்ள என்று கூறலாம். முன்னோர், அயலார், நாட்டுப் பெரும்பான்மை மக்கள் ஆகியவர்களிடமிருந்தே நாம் நம் சமயம், கோட்பாடுகள் முதலியவற்றைக் கொள்கிறோமே யன்றி, நாமாகச் சிந்தித்தல்ல. அறிவும் ஆராய்ச்சியும் பெற்றவர் சிந்தித்து இவற்றுள் சார்பு, எதிர்ப்புக் காட்டாவிடினும், சிந்தித்து உண்மை நிலை அறிந்து

கொள்ளலாமல்லவா?

உன்னைச் சிந்தனைக்கும் ஆராய்ச்சிக்கும் இக் கடிதம் தூண்டும் என்று நம்புகிறேன்.

உன் அன்புள்ள தந்தை,