(190) ||
அப்பாத்துரையம் - 27
காலப் படிக்கட்டுகளில் இறங்கிவந்து, அதற்கு உயிர் கொடுத்து விடுகின்றன. அதோ, அந்த ஏணிப்படியின் வழியே காதில் இறகு எழுதுகோலைச் சொருகிக் கொண்டு முதியோர் ஒருவர் வருகிறார். ஒரு சல்லிக்காசையும் ஒரு பதினாயிரம் பொன்னையும் ஒரே நிலையில் கருதி ஆராய்ந்து கணக்கிடும் கணக்கர்கள் யாவரும், அதோ சுவடிகளைப் புரட்டியும், ஒருவரை ஒருவர் நோக்கிப் புன்முறுவல் செய்தும், பரக்கப் பார்த்தும் காட்சி தருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவர் முகஓவியங்களும், பண்போவியங்களும் ஒரு சிறிதும் வாட்டமின்றி என் கண்முண் இதோ இயங்குகின்றன!
இக்காலச் சிறு வாழ்விற்படாத பெரு வாழ்வுக்கால ஆவிகளே! உங்கள் உயிர் நிலைகள் அமைதியடைவதாக! மறதி எனும் காலத்தின் பாழ்நிலையில் படாமல், இடிந்து விழுந்த இக் கட்ட டமும் அதன் நினைவுகளும் என் உள்ளத்தடத்தில் உங்கட்கு அழியா நினைவுச் சிலைகள். உயிருடன் இயங்கவல்ல உருவச் சிலைகள் செய்து வைத்துவிட்டன!
பணிமக்களின் பண்போவியங்களும் உருவோவியங்களுத் தான் எத்தனை பல்வகைப் பெருக்கமுடையன? இன்றைய நிலையங்களிலெல்லாம் பணிமக்கள் நிலையத்திற்கெனத் தேர்ந் தெடுக்கப்பட்டு, நிலையத்தின் குறுகிய பிரதிநிதிகளாகி விடுகின்றனர். ஆனால், அக்காலத்தில் நிலையம் எவரையும் தேர்ந்தெடுக்கவில்லை. உலகம் தேர்ந்தெடுத்து, 'இவர்கள் நிலையத்துக்கு உரியவர்கள்' என்று அனுப்பிற்று. ஆகவே, அவர்கள் நிலைய வாழ்வுடன் ஒன்றுபட்டனராயினும், உலகத்தின் பிரதிநிதிகளாகவே இருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு தனி வகை, ஒரு தனிப்பண்பு,ஆனால், எவரும் நிலைய வாழ்வின் அமைதியைக் கெடுக்கத்தக்க தனிப் பண்புடையவராக இல்லை!
ா
தென்கடற் குமிழியின் பாழ்நிலையைக் கண்டு அதனைச் சூழ்ந்து இன்று எழுந்துள்ள பொருளகமனை, பங்குமாற்று மனை, இந்தியா மாளிகை ஆகியவை எக்களிப்புக் கொள்கின்றன. ஆம், வீழ்ந்துவிட்ட பழைய உறவினரைப் புறக்கணிப்பாகப் பார்க்கும் புதுச்செல்வர் போன்று அவை தோன்றுகின்றன. ஆனால், உன் ஆவி, உன்னிடத்தில் நின்று இன்றும் வீறுடன் தவழும் ஆவி உருவங்கள் அவற்றின் புதுவாழ்வையும் அதில் பங்குகொள்ளும்