பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




192 ||

அப்பாத்துரையம் - 27

பட்டியல்களையும் விரிந்து அளப்பான். எல்லாக் குடும்பத்தின் வரலாறுகளும், இலண்டன் நகரத்தின் பழைய, புதிய செய்திகள் யாவும் அவனுக்குத் தலைகீழ்ப் பாடம். ஆனால், அதேசமயம் நட்பு முறையில் செய்யும் கேலி தவிர, வேறு எதைப்பற்றியும் எவரைப் பற்றியும் அவன் அவதூறாக எதுவும் சொல்வதில்லை.

எவன்ஸூக்கு அடுத்த படியிலுள்ளவன் தாமஸ் டேம். அவன் உருவம் இன்னும் குனிந்துகொண்டிருப்பது போலவே காட்சியளிக்கிறது. அவன் தோற்றம், உலகின் எவரும் தன்னால் பார்க்கத்தக்க உயர்வுத் தகுதியுடையவரல்லர் என்ற குறிப்புடைய தாயிருந்தது. நடையும் அதுபோலவே. அவன் எவருக்கும் ‘ஆம்’ 'இல்லை' என்ற ஒற்றைச் சொற்களுக்குமேல், மிகுதி பேச்சுக்கு இடம் வைப்பதில்லை. சைகைகள் மூலம் கருத்தறிவிப்பதில்கூட, அவன் வழி ஒரு தனி வழி. பிறரைப் போல முகத்தைப் பயன்படுத்தி அவன் சைகை செய்வதில்லை. தோளசைப்பும், குலுக்கும், உடலைத் திருப்புவதுமே அவனுக்குப் போதிய சைகைகளாயிருந்தன. இவ்வளவு இறுமாப்புக்குக் காரணமாக அவனிடம் எதையும் குறிப்பாகக் காண்பதற்கில்லை. அவன் ஆடைகள் வருந்தித் தூய்மையாகவும் நாகரிகமாகவும் அணியப்பட்டிருந்தாலும் அவை. அவன் செல்வ வளமின்மையை எடுத்துக்காட்டாமலில்லை. அவன் குடும்ப மரபிலும் என்றும் செல்வ நிலையோ, வேறு கல்வி உயர்வோ, குடிப்பிறப்பு உயர்வோ இருந்ததாகத் தெரியவில்லை. அவன் இறுமாப்பின் காரணத்தை

வை எதிலும் காண முடியாது. அவன் மனைவியிடம்தான் காண முடியும். அவன் ஆடையைவிட அவளது கல்வி உயர்வுடைய தாகவே இருக்கும். அவனிடம் அவள் நடந்து கொள்வதைப் பார்த்தால், அவள் அவன் குடிசைக்கு இறங்கி வந்த வேறுலகப் பெண்ணோ என்று தோன்றும், அவனும் அங்ஙனமே அவளை நடத்தி வந்தான். அவளுக்குச் செல்வம் எதுவும் இல்லையாயினும், வறுமையிடையிலும் குடியுயர் வுடையவள் என்ற தொனிப்பு இருந்தது. கணவனும் இம் மதிப்பில் பெருமை கொண்டு அவ்வுயர்வைப் பேணுவதற்காகத் தன் வாழ்க்கையைச் சுருக்கிக் கொண்டான். அவன் இறுமாந்து நடந்ததெல்லாம், அவளால் தனக்குக் கிடைத்ததாக அவன் எண்ணிய உயர்குடிப் பெருமை யைக் காக்கவே, அன்பு கனிந்த வாழ்க்கை இன்பத்தால் மணமான ளைஞருக்கு ஏற்படும் அமைதியைவிட மிகுதியான மன