பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஈலியாவின் கட்டுரைகள்

195

கடைசியாக, மறக்கமுடியாத தோற்றம் நகைச்சுவைவிகடன், கவிஞன், நூலாசிரியன் ஆகிய எல்லாத் துறைகளுக்கும் தென்கடற் கழகத்தின் ஒரே பிரதிநிதியாயிருந்த ஹென்றி மான் ஆவன். ஆம்! யாரை மறந்தாலும் ஹென்றி மான், நான் இன்று உன்னை மறக்க முடியாது. ஏன்? குமிழியாய்விட்ட கழகத் திடையேகூட, நீ இன்று ஒரு பெருங் குமிழியாகத்தான் சுழன்று சுழன்று பொலிவுடன் தோன்றுகிறாய். நீ அலுவலகம் வரும் போதும் ஒரு வெடிப்பு, போகும்போதும் ஒரு வெடிப்பு. தனிப்பண்பும் தனி உணர்ச்சியும் எதுவும் அற்ற எங்கள் கழகக்குழுவில், நீ ஒருவன் இல்லாவிட்டால் எங்கள் வாழ்வும் ஒரே கசப்பாகத்தான் போயிருக்கும். நீ பேசிக் களித்த நகைத் துணுக்குகளன்றி, உலகில் பிற்காலத்தார் துய்க்கட்டும் என்று உனக்கு ஓய்வில்லாமலேயே உழைத்து எத்தனை எத்தனையோ எழுதிவைத்தாய். உன் நகைமுகமும் நகைத்துணுக்குகளும் இன்று மறைந்தன. நீ தொகுத்த நகைத்துணுக்கு ஏடுகள்கூடப் பிற்காலத்தவர்க்குப் பயன்படா என்று எண்ணுகிறேன். அண்மை யில்தான் நான் இரண்டு ஏடுகளைக் கண்டெடுத்தேன். எனக்கு அவை முன்போல் காரமும் மணமும் சுவையும் உடையனவாகவே இருந்தன. ஆனால், காலமாறுதலிடையே உன் பெயர் மறக்கப் பட்டுவிட்டது. புதிய எழுத்தாளர்களைத் தேடியலையும் புத்தக உலகம், உன்னை எங்கே கண்டெடுக்கப் போகிறது? ஆனால், என் உலகத்திலும், குமிழியின் ஆவி உலகத்திலும், உனக்குப் போட்டி யிருக்க முடியாது.

இன்னும் என் ஓவியக் கலைக்காக வந்து இரண்டு உருவங்கள் தான் காத்து நிற்கின்றன. ஒன்று புளூமர். புளூமரின் பெருமையில் முக்கால் பகுதியும் அவன் பேர் பெற்ற ஹெர்ட்போர்டு ஷயர் புளூமர் குடியைச் சார்ந்தவன் என்பதைப் பாறுத்ததே. அவன் அதன் நேருரிமை மரபினனுமல்லன்; அணிமை உறவினனுமல்லன். ஆனால், புளூமர் எப்படியோ உறவுக் கணக்குகளிட்டு, இன்றைய புளூமர் பெருங்குடியிலிருந்து நூலாசிரியர் வால்டர் புளூமர்வரை, தன் குடிமரபைக் கொண்டுபோய் இணைத்து விடுகிறான். ஆனால், மரபு இவ்வளவு பெரிதாய் இருந்தாலும், அதனால் புளூமரின் நடையுடைகளில் எத்தகைய தருக்கும் செருக்கும் கிடையாது.