(200
அப்பாத்துரையம் - 27
இதெல்லாம் தனிப்பட்ட இன்னல்கள் என்று கூறலாம். இவற்றைத் திரு. லாம் முற்றிலும் உணரக்கூடாதது இயல்பே. ஆனால், இவற்றினும் புரளியான ஒரு செய்தியை அவர் வண்ண எழுதுகோல் தீட்டியுள்ளது. ஆற்றில் சிறப்பு முழுக்கு நிகழ்த்தும் நோக்குடன் நாங்கள் பள்ளியிலிருந்து சென்ற உலாக்குழு பற்றி அவர் தம் காவிய ஆற்றல் முழுதும் காட்டி வரைந்துள்ளார். மிக நன்று. ஆனால், நானறிய திரு. லாம் நீந்துவதும், ஓடத்தில் மகிழ் வதும், கூடியாடி நகையாடுவதும் எல்லாம் காவியத்தில்தான்: காரிய உலகில் அவர் ஒரு வீட்டுப் பூனை! ஆனால், இரண்டு பொய் ஒரு மெய் ஆகக் கூடுமானால், அவர் தாம் அனுபவி யாததைக் கூறும் இக்கற்பனை வர்ணனை எங்கள் உண்மை அனுபவத்தை முற்றிலும் வாய்மையுடன் வெளிப்படுத்தாம லில்லை. அதை வாசிக்கும்போதே எனக்கு அன்றிருந்த மகிழ்ச்சி அனுபவம் மீண்டும் வந்து விடுகிறது. ஆம், அத்தருணங்களில் நானும் எவ்வளவு என்னை மறந்து பிறருடன் களித்திருந்தேன்! வழியில் வயல் வரப்புக்களில் நாங்கள் எவ்வாறு ஊடாடுவோம்! பள்ளி வாழ்வின் உறை உள்ளுறைகளை யெல்லாம் வேனிற்காலக் கதிரவன் எங்களைக் கண்டுகளிக்க, எப்படி ஒன்றொன்றாகக் கழற்றி எறிவோம்! ஆற்று நீரில் நாங்கள் நெளிந்த நெளிவைக் கண்டு அதிலுள்ள வாளை மீன்களும் விலாங்கு மீன்களும் எவ்வளவு வியப்படையும்! பசியின் சுவையும் அன்று ஒரு தனிதான். உணவு அன்று வழக்கத்துக்கு மேற்பட்டதாயிருந்திரா விட்டாலும், அது அமுதமாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
எங்களைச் சுற்றி அச்சமயங்களில் ஆடு மாடுகளும் கன்று களும், பறவைகளும் பூச்சிகளும் சுற்றியோடி இரையயிர்ந்த வண்ணமாயிருக்கும், அன்று நான் என் பள்ளி வாழ்வின் கடுமை களை மறந்து, அவற்றின் கவலையற்ற வாழ்வுடன் ஒன்றுபட்டு விடுவேன். ஆனால், மாலையானதும், வழக்கமான வாழ்விலுள்ள ம் மின்னல் மறைத்துவிடும்.
வேனிற்காலத்தில் பள்ளிக்கு வெளியில் ஓர் உலகம் உண்டு. பனிக்காலத்தில்- அதிலும் கடும் பனிக்காலத்தில்- எனக்கு அந்த உலகம் கிட்டுவதில்லை. நான் மட்டுமன்று, என் தோழர்களில் சிலரும்கூட அச்சமயம் வெள்ளி படர்ந்த நகர்த் தெருக்களி