பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(202

அப்பாத்துரையம் - 27

பாட்டின்படி அது நீர் குடிக்கும் நேரமன்று; குடித்தால் அதற்கான அடிபட வேண்டும் என்ற அச்சம் நீர் வறட்சியையும் அடக்குவதாயிருந்தது.

எங்கள் சட்டாம்பிள்ளை திரு அ... அவர் ஒரு சிறு நீரோ தான். (இவர் பின்னாட்களில் வெளியுலகில் கப்பலோட்டியா யிருந்தது, அங்கும் ஏதோ கொடுஞ்செயல் செய்து தண்டனை பெற்றதாகக் கேள்வி. அணிமையில் கொடுஞ் செயல்களாற்றிய அதே பெயருடைய ஒரு பெரும் பண்ணை முதலாளி குற்றவாளி யாய்த் தூக்கிலிடப்பட்டதாக அறிகிறேன். அது பெரும்பாலும் இதே பேர்வழியாகக்கூட இருக்கலாம் என்று எண்ணுகிறேன்). பள்ளியில் அவர் ஒரு சிறுவனைப் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சுட்டுவிட்டார். அவர் பிரிவில் சேர்ந்த எங்கள் நாற்பது பேர்களின் பங்குக்கு வரும் உணவுப் பொருளைப் பல நாளாக இவர் பாதி யாக்கியது கொடுமையிலும் கொடுமை. இது வேலையாட்களில் அவருடன் நட்பாயிருந்த ஒருவர் அவர் சலுகையுடன் செய்த செயலென்பது நெடுநாள் பிந்தித்தான் தெரியவந்தது. அது தானாகக் கண்டுபிடிக்கப்படும்வரை நாங்கள் யாரும் எதுவும் வெளியிடத் துணியவில்லை- அதே சாட்டையின் அச்சம்தான்!

திரு. லாம் மறைத்த சின்னஞ் சிறு செய்திகளையெல்லாம் நான் கூறிக்கொண்டிருக்கப் போவதில்லை. ஒரே ஒரு சிறு செய்தியை- அவர் மறைத்த சிறு காவியமொன்றை மட்டும் கூறிவிடுகிறேன். பள்ளி மாணவர் எவருக்குமே மணற்பிட்டு என்றால் பிடிக்காது என்பதை அவர் குறித்துள்ளார். (மணற் பிட்டு என்றால் மணலால் செய்த பிட்டு என்று நினைத்து விடாதீர்கள்! அது மணல்போலிருக்கும். ஆனால், பிள்ளைகள் அதை மணலைத் தின்பது போலத்தான் வெறுத்தார்கள்). ஆயினும், அந்தப் பிட்டையும் ஒருவன் தொடர்ச்சியாகப் பல நாள் திருடியதும், அதற்காக அவன் தண்டனை பெறுவதற்கு மாறாகப் பரிசு வழங்கப்பட்டதும், எங்கள் பள்ளியின் மறக்கமுடியாத சுவைமிக்க கதை. சுவை மிக்க காவியம் எழுதப் புறப்பட்ட நம் லாம், இதை மட்டும் ஏனோ விட்டுவிட்டார்!

எல்லாரும் மணற் பிட்டைத் தின்னமுடியாமல் முக்கி முக்கி உள்ளே தள்ளிக்கொண்டிருக்கையில், ஒரே ஒரு சிறுவன் மட்டும் ஒரு சிறிது கூட உட்கொள்ளாமல் தின்பதுபோல் பாவனை

3