ஈலியாவின் கட்டுரைகள்
(207
ரிச்சர்டு ஸ்டீல்- நம் காலஞ் சென்ற ஒப்புயர்வற்ற பிரின்ஸ்லி- ஆகியவர் காலத்தாலும், இடத்தாலும், தொடர்பாலும் எவ்வளவு வேறு வேறானவர்களானாலும், இப்பேரினத்துட் பட்டவரான தால் எவ்வளவு குடும்ப ஒற்றுமை போன்ற நெருங்கிய ஒப்புமை யுடையவர்களா யிருக்கிறார்கள்!
இரவல் பெறும் இனத்தவர் கடவுளின் திருக் குழந்தை களாகத்தான் இருக்க வேண்டும்! அவர்கள் முகம் அன்றலர்ந்த செந்தாமரையை வெல்கிறது. செந்தாமரையைப் போலவே அதற்கும் கவலை சிறிதளவும் கிடையாது. தெய்வம் விட்ட வழி அவர்கள் வழி என்பதில் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை! பணம் என்றால் (அதிலும் என் கைப்பணம், உங்கள் கைப்பணம் போன்ற பணம் என்றால்) அவர்களுக்குத் துரும்பிலும் கேடு- ஆனாலும் பணம் நம் போன்றவர்களை விட்டு அவர்களிடம் விரைந்து செல்லத் தவறுவதில்லை. 'நீ', 'நான்': 'உனது' 'எனது'- ஆகிய பதங்களெல்லாம் முழு முட்டாள்தனமான வேறுபாடுகள் என்ற பாவனை அவர்கள் பணம் பற்றிய புறக்கணிப்பில் தொனிக்கிறது. அவர்கள் வகையில் அது சரிதான். இந்த 'முன்னிலை' 'தன்மை' ரண்டும் அவர்களிடம் போய் ஒன்றுபட்டுத் தஞ்சம் அடைகின்ற வைதாமே? ஆனால், அவர்கள் பெருமிதமான பொது உடைமை- அவர்களுக்குத்தான் பொது உடைமை, நமக்குக் கிடையாது- இதனை ஒரு வகை அரைப் பொதுவுடைமை என்ற கூறலாம். ஏனெனில், இப் பொதுவுடைமை தாழ்நிலமாகிய நம் போன்றவரிடத்திலிருந்து உயர் நிலமாகிய இப் பேரின நோக்கி மட்டும் பாயும். உயர் நிலத்திலிருந்து தாழ் நிலத்துக்கு வராது. நீரின் இயல்புக்கு இது நேர் மாறானது- ஆயினும், இதனைச் சமதர்மம் என்பது முற்றிலும் பொருந்தாது!
ஆட்சியின் முழு இலக்கணமும் அமைந்த ஆட்சியாளர் நம் மேலினத்தவர்தாம். 'இறை பிரிப்பவருள் மிகச் சிறந்த இறைவர் மக்களனைவரிடமிருந்தும் இறை பெறுபவர்களே!' இது பொருள் நூலார் கூறும் இறை பிரிப்போர் இலக்கணம். இறைவர் இந்த இலக்கணத்தில் தவறினாலும் தவறலாம், இரவல் வாங்கும் இறைவர் இம்மியும் தவறமாட்டார்கள். அவர்கள் தம்மை நீங்கலாக மற்ற எல்லாரிடமும் இறை பிரித்து விடுவார்கள்.