பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஈலியாவின் கட்டுரைகள்

[211

எப்போதும் வெறும் பையாக வைத்திருந்தார் என்பதுதான் எனக்கு வியப்பு!

பணத்தை இரவல் பெறுபவரைக் குறிப்பிடும் இந்த இடத்தில், அதே இனம் சார்ந்த புத்தக இரவலாளரையும் குறிப்பிடாமலிருக்கமுடியாது.ஏனென்றால் பையில் பணம் மிகுதி இல்லாத காரணத்தால், முன்னவர்க்கு நான் அவ்வளவாக இறையிறுக்கவில்லை. ஆனால், புத்தகங்கள் வகையில் இத்துறை அனுபவம் எனக்கு நிரம்ப உண்டு. நாம் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினென்கணக்கு என்று புத்தங்கள் அரும்பாடுபட்டுத் தொகுத்து வைத்திருப்போம். அந்தோ, விரைவில் பத்துப் பாட்டில் இரண்டு எடுபட்டுப் போகும். எட்டுத் தொகையில் ஒன்று ஒன்றாக ஏழு போய்விடும். பகுதி பகுதியாயுள்ள நூல்களில் முற்பகுதி பிற்பகுதியைப் பறிகொடுத்து ஏங்கி நிற்கும், (அ) பிற்பகுதி முற்பகுதியைப் பறிகொடுத்து அங்கலாய்த்து நிற்கும். சில சமயங்களில் முற்பகுதியும் பிற்பகுதியும் இருக்கும். அவற்றை இணைக்கும் இடைப்பகுதி ஊடறுக்கப் பட்டிருக்கும். அதோ என் சிறு புத்தக நிலை அடுக்கில் அடித்தட்டில் இரண்டு பெரிய சமய நூல்களுக் கிடையே அவற்றுக்கிணையாக வடிவும், அவற்றிலும் பன்மடங்கு திட்பமுடைய ஒரு ஏடு இருந்தது. அது இன்றில்லை. அதை என் நண்பர் கம்பர் ஹாச் வந்து கண்டு வெற்றியுடன் கொண்டு போனார். அவர் என்னிடம் அதைப் பெற்ற முறை என் போன்றவரால் மறுக்க முடியாத ஒரு முறை என்றுதான் கூறவேண்டும். ‘அன்பரே! இந்த நூலிலடங்கிய பொருள்கள் உமக்கு தெரியுமென்று நினைக்கிறேன்' என்றார். எங்கே ஏதேனும் கேள்வி கேட்டுவிடப் போகிறாரோ என்று எண்ணித் ‘தெரியாது’ என்றேன். உடனே அவர் “அப்படியானால் அதை ஏன் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். புத்தகங்கள் அவற்றைப் படித்துப் பயன்படுத்துபவர்களுக்குத்தான் உரியவை” என்றார். நான் மறு பேச்சுப் பேசாமல் புத்தகத்தை எடுத்து என் வீட்டுச் சிறுவனிடம் கொடுத்து, அவருடன் சென்று அவர் வீட்டில் கொண்டு சேர்த்து விடும்படி கூறினேன்!

என் நிலையடுக்கின் மேல் தட்டின் இடப்புறம் பார்வைக்குப் புத்தகங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது.ஆனால், அதில் ஏற்பட்ட ஒரு குறையை- நான் என்றும் மறக்க முடியாத ஒரு குறையை- என்