ஈலியாவின் கட்டுரைகள்
[213
போலவே அவர் ஒரு சமயம் ஒரு நாட்டையே அடித்துக்கொண்டு போவார். மறு சமயம் மணலைக் கொண்டு வாரியிறைத்து ஒரு புதிய நாட்டையோ, தீவையோ உண்டு பண்ணவும் செய்வார். அவர் பல புத்தகங்களைக் கொண்டு செல்வார். சில சமயம் ஒன்றிரண்டு புத்தகத்தை யாரிடமிருந்தாவது எடுத்துக்கொண்டு வரும் வழியில், இங்கேயே போட்டு விட்டும் போய்விடுவார். சில வற்றில் அவர் ஏட்டின் நாலு அருகிலும் நிறையக் குறிப்புரைகள் எழுதிவைத்துச் செல்வார். ஏட்டில் அச்சடித்த எழுத்துக்களிலும் கைப்பட எழுதியது மிகுதியாயிருக்கும். ஆனால், அத்தகைய டுகள் கிடைத்தால், நான் அச்சடித்த எழுத்துக்களைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. அவற்றைவிட அவர் எழுதியவை எத்தனையோ மடங்கு உயரியவையாயிருக்கும். எனவே, என் புத்தகங்களில் அவர் எத்தனை எடுத்துச் சென்றாலும் எனக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்- இங்ஙனம் எடுத்துச் செல்லும் பழக்கத்தால், இன்னும் அடிக்கடி வந்து, இன்னும் பல குறிப்புகள் எழுதிய நூல்களை மறந்து போட்டு விட்டுச் செல்லமாட்டாரா என்று நான் எதிர்பார்த்திருப்பேன்.
காலரிட்ஜுக்கு நூல் கொடுப்பதிலாவது இத்தகைய மன நிறைவுக்கு இடமுண்டு. என் மற்ற நண்பர்- அவர் கொண்டு சென்றது ஒன்றே ஒன்றானாலும் நான் என்றும் அதை மறக்க முடியாது."பொறாமை பிடித்த க-! உன் நண்பரிடம் உனக்கு ஏன் இத்தனை பொல்லாக் குறும்பு! நீர் அப்புத்தகத்தை என்றும் வாசிக்கப் போகிறவர் அல்ல என்பது எனக்குத் தெரியும்-எனக்குத் தெரியும் என்பதை நீரும் அறிவீர்! அதை நீர் வேண்டும் என்று கேட்டதெல்லாம்- அதனிடம் எனக்கு அவ்வளவு ஆர்வம் என்பதை நீர் அறிந்திருப்பதனால்தான். நண்பர் பற்றுவைத்த பொருளை நாம் பெற்றுவிட வேண்டும் என்ற போட்டி உணர்ச்சி ஒன்றே உம்மை அதைக் கைக்கொள்ளத் தூண்டிற்று என்று கூறவேண்டும். எடுத்துச் சென்றதுடன் அதை என் நாட்டிலேயே வைக்கக்கூடாதென்று உம் மாமனார் வீட்டுக்கு- பிரான்சுக்குக் கொண்டு சென்று அங்கே தொலைக்கவேண்டுமா?- ஆம். இப்போது நினைவுக்கு வருகிறது. நீர் அந்தப் புத்தகத்தை வாங்கித்தர வேண்டுமென்பதில் சற்றுத் தயங்கியபோது, அதையே உம் மணிப்பரிசாக வற்புறுத்தியது உம் மனைவி என்பது எனக்கு நினைவுக்கு வருகிறது. அவள் பிறப்பில் பாதி பிரஞ்சுக்காரி, பாதி ஆங்கிலேய மாது. ஆங்கிலப் பண்புதான்