பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஈலியாவின் கட்டுரைகள்

219

கச்சேரிக்காரன் இசை என்ற பெயருடன் நம் காதுக்குள் ஊற்றும் நாராசத்தைத் தான் என்னால் தாங்க முடியவில்லை.

இசையறிவில்லாத எனக்குத்தான் இவ்விசை யரங்குகள் பிடிக்கவில்லை என்று நான் எண்ணியதுண்டு. ஆனால், இசை அரங்கேற்றுபவர் முகத்தைவிட்டுக் கூட்டத்தவரைப் பார்த்த போது, இவ் எண்ணம் மாறுதலடைந்தது. முன்னணியில் வீறாப் புடன் வீற்றிருந்த ஒரு சிலர்தான் ஏதோ இசை நுகர்பவர்போல் காணப்பட்டனர். மற்றவர்கள் எல்லாரும் உணர்ச்சியற்ற கற் சிலைகள்போல் உட்கார்ந்திருந்தனர். எனக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு ஒன்றுதான். நான் அவ்விசை எனக்குத் துன்ப மயமானது என்று வெளியிட்டுக் கூறுகிறேன். அவர்கள் அங்ஙனம் கூறுவதனால், தம்மை இசையறிவற்றவர், நாகரிக மற்றவர் என்று மற்றர்வர்கள் கூறுவார்கள் என்று எண்ணி,வாளா தம்மையடக்கிக் கொண்டு இருந்து விடுகிறார்கள். அவ்வளவு தான், அவர்கள் சிலை போன்ற முகம், இத் தன்னடக்கத்தை மட்டுந்தான் காட்டுகிறது. முன்னணியிலிருந்து தலையசைத்துக் கைகொட்டும் தம்பிரான்களும், இசையுணர்ச்சியாலோ, இனிமை யாலோ மகிழ்பவராகக் காணவில்லை. தம் இசையறிவைக் காட்டிப் பிறரிடம் தம் உயர்வை நிலைநாட்டிக் கொள்ள எண்ணும் இறுமாப்பு ஒன்றே அவர்கள் செயலிலும், தோற்றத் திலும் தொனித்தது. இக்காலக் கலையரங்குகள், கலையுணர் வுடையோர் உயர்ந்தவர், அல்லாதவர், தாழ்ந்தவர் என்று கூறி நாகரிகச் சீட்டுக் கொடுத்து, உயர்வுடைமையை விற்று நல்ல வாணிகம் செய்யும் வாணிகக் களங்களாக ருக்கின்றனவே

யன்றி, மக்களுக்கு இன்பமும் நல் ஓய்வும் உயர்பண்பும் தருபவை யாக இல்லை.

அதிலும் இனிமையாகவோ, கடுமையாகவோ ஏதேனும் மனித மொழியில் சொற்கள் இவ் விசையரங்குகளில் ஒலித்தால் கூடக் கேடில்லை. மொழிக்கும் சொல்லுக்கும் இடமில்லாத வாய்பாடுகளை- எம் மொழியிலும் பொருளில்லாத 'சரி சச கரிகக' என்ற ஒலி யடுக்குக்களை மாறி மாறிப் போட்டு வதை வாங்கும் வழக்கம் இசையரங்குகளை மறைமுகமான வதைக் களங்களாக்குகின்றன. இவற்றை நான் கூறுவதுதான் யாரும் கூறத் துணிய மாட்டார்கள். அவர்கள் இசையறிவற்ற கீழ்மக்கள் என்று