(220)
||
அப்பாத்துரையம் - 27
தூற்றப்படுவார்கள். இயற்கை இசையறிவு ஓரளவு இருந்தாலும், இந்தக் கலையியல் அறிவு ஏற்படாத காரணத்தால், அந்த வசவுக்கஞ்சாது நான் இதனைக் கூறமுடிகிறது.
இவ் விசையை உணரும் கலையறிவு பெற்றிருந்தால்கூட என்னால் இவ் விசை அரங்குகளைத் தாங்கிக்கொள்ள முடியு மென்று தோன்றவில்லை. சாதி முல்லை இதழ் விரித்த மலர்ப் படுக்கையில்கூட, எத்தனை நேரம் ஒருவன் பிறழாது படுத்திருக்க முடியும்? தேனோடு சருக்கரையையும், சருக்கரையொடு தேனையும் மட்டும் கலந்து உண்டு ஒருவன் எவ்வளவு காலம் கழிக்கமுடியும்? வெறும் ஓசையையும் ஒலியையும் கேட்டு, எத்தனை நேரம் அவற்றுக்கு நம் புனைவாற்றலால் உணர்ச்சி யுருவும், பொருளுருவும் கொடுத்து நுகரமுடியும்? வெறும் சட்டங்களையே பார்த்து 'மானசிகமாகப் படங்களை எவ்வளவு நேரம் அவற்றில் பொருத்திக் கொண்டு இருக்க முடியும்? கோடுகளும் நிறுத்தற் புள்ளிகளுமே நிறைந்த ஒரு ஓட்டில் சொற்களை நாமாக நிறைத்து எவ்வளவுதான் படிப்பதாகப் போலிப் பகட்டுப் பகட்ட முடியும்? கைகாலை அசைத்துக் கண்டபடி உளறும் ஒரு கோட்டிக்காரனை ஓரருங் கலைஞன் என்று பலர் கூறுவதற்காக எவ்வளவு நேரம் பொறுமையுடன் பார்த்திருந்து, அவன் சாடைகளுக்கு ஏற்ற நாடகக் காட்சி களையும், அவன் உளறலுக்கேற்ற பேச்சுக்களையும் பாட்டுக் களையும், கற்பனை செய்துகொண்டிருக்க முடியும்? இவ்வளவும் செய்வது எவ்வளவு கடினமோ, அவ்வளவு கடினம் இசையரங்கு களைக் கேட்டுக் களிப்பது. இவற்றைப் பணத்தையும் கொடுத்துக் கேட்டுத் தொலைக்கப் பண்ணுகிறது நம் அரிய இசைக்கலை யறிவு என்னும் அருந்திறம்!
ஒவ்வொரு சையரங்கிலும் தொடக்கத்தில் நல்ல பொழுது போக்குக் கிட்டும் என்று நானும் நம்பினேன். ஒவ்வொரு அரங்கிலும் தொடர்ந்து ஏமாற்றமடைந்த பின், இசையரங்கு என்ற பெயரைக் கேட்டாலே நான் நடுங்கி ஓடத் தொடங்கிவிடுவேன்.
இன்பத்தை எதிர்பார்க்க வைத்து இறுதியில் ஏமாற்றத்தை ஊட்டும் இவ்வரங்குகளை நினைக்கும்போது, அவலச் சுவை பற்றி பர்ட்டன் கூறும் இனங்களும், அது தரும் ஏமாற்றமும் நினைவுக்கு