பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




222 || அடிக்குறிப்புகள்

அப்பாத்துரையம் - 27

1. கடின ஓசையுடைய இலத்தீனக் கடுஞ் சொற்களால் இக்கட்டுரையில் ஆசிரியர் நகைச்சுவை விளைவிக்கிறார். தமிழாக்கத் தழுவலில் அதேயிடத்தில் தமிழின் வடசொற்கள் அதே பகட்டோசையுடன் தரப்படுகின்றன. இவற்றின் பொருள். பாஹ்யகப் ப்ரகாண்ட த்வயங்கள் - இருபுற உறுப்புகள்: சில்வ சாஸ்த்ர பரிபாஷா ரீதிப்படி - சிற்ப நூல் துறைக்குரிய சொல் வழக்கின்படி: மானுஷ சிரஸ்தானானு பந்தங்களை - மனிதர் தலைப் பகுதியின் பக்க இணைப்புக்களை; அந்தர் வர்த்தி தோத்காத சௌந்தர்ய யுகளங்களை - உட்குடைவான புழை உடைய அழகிய இணைகளை.

2. கர்த்தபராஜன் - கழுதை: சுந்தரி ராணி - முள்ளெலி.

3. அத்யாவச்யக ஜீவ மூல்யாதாரங்களான பார்ச்வவார்த்தாக்ரகிகள் - இன்றியமை யாத உயர்நிலைத் துணைகளாய் செய்திகளைக் கேட்டுணரும் இப்பக்க உறுப்புகள். 4. டானியல் டிஃவோ பிரிட்னின் முதல்பத்திரிகை ஆசிரியர். அவர் அரசாங்கத்துக்கு மாறானவற்றையும் பிரிட்டிஷ் சமுதாயத்துக்கு மாறானவற்றையும் எழுதியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் காதறுபட்டார்.