ஈலியாவின் கட்டுரைகள்
225
இன்றைக்குரிய போட்டி ஒன்றே ஒன்றுதான்- இன்றைக் குரிய ஆராய்ச்சியும் ஒன்றே ஒன்றுதான்! அது நம் வரலாற்றில் மிகச்சிறந்த ஒப்புயர்வற்ற மட்டி யார் என்பதே! இக் காலத்தில் சிறந்தவர் யார் என்பதை ஆராய வேண்டுவதில்லை! அதை நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
உலகின் முதல் அறிஞரே ஒரு மட்டிதான்? அவர்தான் எம்பிடாக்ளிஸ். அவர் அறிவுப் புல் நாடி எட்னா எரிமலையின் எரிவாய்க்குள் சென்று துழாவினாராம். அறிஞருள் சிறந்த மட்டியும் அவர்தான்.
உலகை முழுதும் வெல்ல முயன்ற முதல் வெற்றி வீரன் அலெக்ஸாண்டரும் ஒரு மட்டிதான். குழந்தை அலெக்ஸாண்டர் ஒரு கிச்சிலிப்பழம் வேண்டும் என்று அழுதாராம். ஆனால், வீர அலெக்ஸாண்டர் ஓர் உலகம் வேண்டும் என்று அழுதார். பாவம், ஒரு கிச்சிலிப்பழத்தை வாயில் கௌவி, அவரால் மறு கிச்சிலிப் பழம் கேட்டுப் பெறமுடியும். ஆனால், ஓர் உலகைப் பாதி வெல்வதற்குள் அவர் இறந்துபோய்விட்டார்!
அறிஞரும் வீரரும் நல்ல மட்டிக்கணக்குப் போட்டியிடும் போது, மட்டிகள் எவரும் அறிஞராக, ஆராய்ச்சித் திறம் உடை யவராக நடிக்க வேண்டாம். இந்த நாளில் மட்டுமாவது உலகத்தின் அறிவின் தொல்லையும், ஆராய்ச்சியின் குறும்பும் இல்லாதிருக்கட்டும்!
இலக்கியத்தில் சால மட்டிகள் நிறைந்த இலக்கியம் நம் ஆங்கில இலக்கியமே! மட்டிகளின் முடிசூடா மன்னன் ஸர் ஆன்ட்ரூ ஏச்சீக் முதல் மாஸ்டர் ஷாலோ, மாஸ்டர் ஸ்லெண்டர், மாஸ்டர் ஸைலர்ஸ், மாஸ்டர் ஆடம்ஸ், எவ்வளவு ஏட்டறிவு மட்டிகளின் கொலு மண்டபத்தை அதில் காண்கிறோம்.
நம் ஆராய்ச்சியால் நேரம் கடந்து விட்டது. மட்டி நாளின் இரவு சென்று அதோ, அறிவுக்கால ஒளி தோன்ற இருக்கிறது. நாம் இனி நெடுநேரம் மட்டியாயிருக்க முடியாது. இனி யாரையும் ‘அம்மாஞ்சி' ஆக்கவும் முடியாது. ஆயினும், இவ்வினிய இராப் போது போகுமுன் உங்கள் அனைவரிடமும் ஒரு மறை செய்தியைக் கூறிவிடுகிறேன். எனக்கு உள்ளுக்குள்ளே- உலகக் கட்டுப்பாடுகளில் ஈடுபடாத வேளைகளிலே மட்டிகள் மீது ஒரு