பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஈலியாவின் கட்டுரைகள்

229

எதிர்மறைகளே இவைகள். கண்ணைத் திறந்து கொண்டு பார்க்கும் ஒளியைக் கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால் ஒளி பெரிதும் குறைந்து 'இருள்' ஆய்விடும். அது ஷபோலவே கண்ணைத் திறந்துகொண்டு பார்க்கும் இருளைக் கண்ணை அடைத்துக்கொண்டு பார்த்தால் அது இன்னும் இருண்டு, இருட்டு, ஆய்விடும். ஒலி ஆழத்தினின்று ஆழம் எதிரொலிக் கின்றதன்றோ? அதுபோல மோனமும் ஆழத்தினின்று ஆழம் எதிரொலிப்பது அல்லது எதிர்மோனிப்பது உண்டு. மனித உள்ளத்தின் ஆழத்திலிருந்து மோனம் பிற மனிதர் உள்ளத்தின் ஆழங்களிலும், பேருள்ளமாகிய இறைவன் திருவுள்ளத்தின் ஆழத் திலும் சென்று ‘எதிரளி’க்கின்றது. இம்மோன எதிர் மோனம் எல்லாம் ஒருங்கே திரண்டு, மனித உள்ளங் களனைத்தையும் இயக்கும் ஒரே மோனக் கடலாய், மோனப் பேரியக்கமாய் நிறைகின்றது. ஒலிக்கு ஒரு உச்ச அளவு உயர்வு இருப்பது போல, மோனத்துக்கும் ஒரு நிறை மோன ஆழம் இருக்கிறது என்பது உண்மையேயன்றோ?

தனி மனிதன் மோனம் எவ்வளவு செயலற்றதா யிருந்தாலும், அது குறை மோனமேயாகும். அதன் ஆற்றல் மிகச் சிறிது. மனித உள்ளத்தின் ஆழ்ந்த புண்களை இத்தனி மோனம் ஆற்றவல்லதன்று. ஆனால், பெருந்திரளான கூட்டத்திலுள்ள நிறை மோனம் இத்தகைய ஆற்றலுடையது.உலகின் முற்கால எகிப்தியத் துறவினர் தனை உணர்ந்திருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் மோனத்தை நாடித் தனியிடம் ஏகிய போதும், தனித்து ஏகவில்லை; குழாம் குழாமாகச் சேர்ந்தே சென்றனர். உரையாடுவதற்காக நாம் கும்பு சேர்வது போல், அவர்கள் ‘மோனமாடு' வதற்காகக் கும்பு நாடினர். அவர்கள் உரையாடா ஒப்பந்தம் நம் உரையாடலை விட அவர்கள் அனைவரையும் நன்கு பிணைத்தது. உரையாடலில் உயர்வு தாழ்வு, கருத்து வேறுபாடு, பூசல் ஆகியவற்றுக்கு வழி உண்டு.மோனத்தில் வெற்றியும் உயர்வும் முழு மோனத்தில்தான்- தவிர, மோனத்திலே பூசல் இருக்க முடியாது; அது அமைதியின் திருவடிவம்!

இவ்வுண்மையினைச் சமயத் துறையில்தான் காணவேண்டு மென்றில்லை. உலகியல் வாழ்விலேயே திறம்படக் காணலாம். கொடும்பனிக் காலத்து மாலை நேரத்தில், வீட்டின் மூலையில்