(230)
அப்பாத்துரையம் - 27
சாய்விருக்கையிலமர்ந்து வாய்விடாது ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, அருகே உயிருக்குயிரான ஒரு நண்பன் அல்லது மனத்துக்குகந்த வாழ்க்கைத் துணைவி மற்றொரு புத்தகத்தை வைத்துக்கொண்டு வாசிப்பதைவிட, உயர்ந்த வாசிப்பு இன்பம் என்ன இருக்கமுடியும்? அந்நேரத்தில் ஒருவருக்கொருவர் பேசாமலே, இருவரும் ஒரே நூலை வாசிக்க வேண்டிய அவசியம்கூட இல்லாமலே, இருவருக்கும் தனி அமைதி உண்டாவதில்லையா? உரையாடலால்தான் உள்ளங்கள் பரிமாறிக்கொள்ள முடியும் என்ற தப்பெண்ணத்தையும், தனியே இருப்பதில்தான் அமைதி காண முடியும் என்ற தப்பெண் ணத்தையும், இரண்டையும் இத்தகைய நிகழ்ச்சிகள் போக்க வல்லன. திரு ஃஜிம்மர்மென் கூறுகிறபடி ஒத்துணர்வுடன் கூடிய தனிமையினும் மேலான இன்பம் எதுவும் இல்லை.
காதில் கேட்கும் ஒலியும் உண்டு. காதில் கேளா ஒலியும் உண்டு. அதுபோலவே, காதில் கேளாத மோனமும் உண்டு. காதறியக் கேட்கும் மோனமும் உண்டு என்னலாம்.ஆளற்ற பாரிய கோயில் சிகரங்களில் உலாவுகையில் ஏற்படும் மோனம், கேளா மோனம்; பலர் ஒருங்கு கூடுமிடத்தில் ஏற்படும் மோனம் செவிப் படும் மோனம்! இம்மோனம் நம் புலணுணர்வுக்கு எட்டுகிறது.நம் உள்ளத்திற்கு அமைதி தருகிறது. இக்காரணத்தினா
பாரித்தகன்ற வெஸ்ட்மின்ஸ்டர் மாடத்திலும் அடையப்பெறாத மோன இன்பத்தை, நாம் குறுகிய இடத்தில், எளிய இருக்கைகளில் அமர்ந்து வழிபடும் குவேக்கர் வழிபாட்டுக் கூட்டத்தில் பெற முடிகிறது. கல்லறையிலும், சாவிடத்திலும், பழங்காலப் பாழ்ங் கட்டிடத்திலும், குகைகளிலும், எங்கும் இத்தகைய மனிதப்பண்பு நிறைந்த மோனத்தை- துயரும் சோர்வும் கலவாத மோனத்தை நாம் அடைய முடியாது. பழமையில் கருத்துச் செலுத்துவோர், மனித வாழ்க்கையை வெறுத்தோர் ஆகியவர் மோனம் நம்மிடத்திலிருந்து தொலைதூரத்திலுள்ள ஒரு மோனம். நம் கழுத்தை நீட்டிக் கண்ணைத் துருத்தி நாம் அதைக் காண முயலவேண்டும். குவேக்கர் கூட்டத்தின் மோனத்தைப் போல அது அணுகத்தக்க, கலந்து ஒன்றுபடத்தக்க மோனமல்ல.
நினைக்கப்போனால், மனித உலகத்தினகமாக ஒரு தெய்விகத் தன்மையை எங்காவது காணமுடியுமானால், அதைக்