பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(234 ||–.

அப்பாத்துரையம் - 27

இளமைக் குறுகுறுப்பில் பேசுவதையே பெரும் பேச்சு என்று கொண்டிருக்கலாம். ஆனால், அவர் மன்னிப்புக் கோரிக்கையின் உள்ளார்ந்த வாய்மை, பணிவு, தெய்வப்பற்று ஆகியவை எளிதில் எங்கும் காணப்படாதவை.

நாம் குவேக்கராக இருக்க விரும்பாதபோதும்கூட,வாழ்க் யிைன் பல அல்லல்களிடையே, நெஞ்சுக் குழப்பங்களிடையே அவர்கள் வழிபாட்டிடத்தில் ஒரு அரைமணி நேரம் போயிருந் தால் பெறும் அமைதி பெரிது. ஒரு ஆடு நின்று மேய்வது போல நாற்பது நின்று மேயும் அமைதி நம்மையும் கௌவத்தக்கதே!

று

குவேக்கர்களின் ஆடையும் தூயவை- அழுக்கற்றவை மட்டுமல்ல, அழுக்கற்ற நிறமாகிய வெண்ணிறத்தவை. இங்கும் தூய்மையின் எதிர்மறைப் பண்பு மட்டுமன்றி, அதன் உடன்பாட்டுப் பண்பும் முனைத்துத் தோன்றுகிறது. பிரிட்டனி லுள்ள குவேக்கர்களெல்லாம் நகரில் வந்து கூடும் விழா நாட்களில், அவர்கள் நகரையே வெள்ளொளிமயமாக்கி, , அதை வானுலகத்தின் ஒரு பகுதியாகக் காட்சியளிக்கச் செய்கின்றனர்.

அடிக்குறிப்பு

1. ரிச்சர்டு ஃவ்ளெக்னொலின் பல்வகைப் பாட்டுகள்' (Poems of All Sorts)