ஈலியாவின் கட்டுரைகள்
237
மறுமொழியை எதிர்பாராமலே அளந்ததுடன், அடிக்கடி என் கருத்துகளையும் உசாவியறிய முற்படலானார்.
டி
வண்டிக் கட்டணத்திலிருந்து தாடங்கி வண் ஓட்டிகளின் நடை உடை குணங்கள், போட்டி வண்டிகள் ஏற்பட்டதால் வந்துள்ள விளைவுகள் ஆகியவற்றைப் பற்றி முதலில் தாமாகப் பல கருத்துக்களை வெளியிட்ட பின், அவர் திடுமென ஒரு கேள்வி கேட்டு விட்டார். க... பண்ணையிலுள்ள கால்நடைப் பரிசுக் காட்சியைப் பார்த்தீர்களா என்று! நான் பார்த்ததில்லை என்றவுடன் அவர் வியப்படைந்து, பின் அதைத் தாம் அப்போதுதான் பார்த்து வருவதாகக் கூறினார். அத்துடன் அவர் அதனை வருணித்து அத்தகைய ஒரு திட்டம் ஏற்பட்டிருப்பது சமூகத்துக்கு எவ்வளவு நலம் விளைவிப்பதாகும், என்பதுபற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றித் தீர்த்தார். அதற்குள் நா... கெவுனியண்டை சில துகிற் கடைகள் இருப்பது கண்ணிற்படவே. சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக வந்து பருத்தியாடைகள் பற்றியும், அவற்றின் நேர்மை மலிவு ஆகியவைகள் பற்றியும் வெப்பமான நாடுகளில் இவற்றையே மனிதர் பொதுப்படையாக அணிவது பற்றியும், இச்சார்பில் வருங்காலத்தில் பிரிட்டனுக்கு ஏற்படவிருக்கும் ஏற்றுமதி வாணிக வாய்ப்புகள் இப் புதிய மூலப் பொருளால் உலகில் ஏற்பட்டுள்ள புரட்சி பற்றியும், விரித்துரைத்தார். இறுதியில் அவர் ஒரு 'இந்திய' வாணிக முதலாளியோ என்று நான் ஐயப்படும் அளவுக்கு அவர் இந்தியாவின் தொழில் நிலைமை, வர்த்தக நிலைமை ஆகியவை பற்றிய ஆராய்ச்சிகளில் இறங்கினார்.
இவர் யார்? இவருக்கு இவை எல்லாம் எப்படித் தெரியும்? இவ்வளவு உலக அறிவுடைய இவர் இந் நாட்டில் ஒரு மந்திரியா யிருக்கக் கூடுமே? அப்படிப்பட்டவர் இங்ஙனம் பொது மக்கள் பயணஞ் செய்யும் வண்டியில் வருவானேன்? இவ்வாறெல்லாம் நினைத்துக்கொண்டே நான் பேசாது கேட்டுக்கொண்டிருந்தேன்.
இப் பேச்சு முழுவதும் முடிவதற்குள் அவர் இன்னும்திடுக்கிட வைக்கத்தக்க மற்றொரு கேள்வி கேட்டார்.“லண்டனில் சில்லறை வர்த்தகர்களின் கடைச் சாவடிகளிலிருந்து வரும் மொத்த வாடகை எவ்வளவு இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்பதே அக் கேள்வி! இதையெல்லாம் அறிய என்னை அவர்