பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(240

அப்பாத்துரையம் - 27

மேலும் உலகனைத்துக்கும் ஒரே சட்டம் வகுத்த பண்டைக் கால முனிவர் பாணியில், அவர்கள் இவ்வுறுதியை உலக முழு மைக்கும் பரப்பும் வகையைக் காணுங்கள்! "இலக்கணங்கள் எத்தனை எத்தனையோ வகையில் இருந்தாலும், ஆசிரியர் மாறுபாட்டாலும், பள்ளி மாறுபாட்டாலும் மாணவர் இலக்கணப் பயிற்சியின் ஒழுங்கு பாதிக்கப்படாமலிருக்கும்படி, மன்னபிரான் அரசாங்கத்தார் இவ் ஒரே இலக்கண நூலை எல்லாப் பள்ளிகளிலும் இலக்கணப் புத்தகமாக வைத்துள்ளது பொருத்தமானது. எந்த ஆசிரியர் வந்தாலும் போனாலும், பள்ளிக்குப் பள்ளியாக, எத்தனை பள்ளி மாறினாலும், மாணவர்கட்கு இதனால் எத்தகைய இடைஞ்சலு மில்லாதிருக்க வகை செய்யப்பட்டுள்ளது. மாணவன் வேறு எதிலும் கருத்தைச் சிதறடிக்காமல் தன பெயர்கள், வினைகள் ஆகியவற்றைக் கையாளும் திறத்தில் கருத்தைச் செலுத்த முடியும்”.

தன் பெயர்கள், வினைகள்! மாணவன் வாழ்க்கையே இந்தப் பெயரிலும் வினையிலும்தான் அடங்கிக் கிடக்கின்றது என்பதை இவ் வாசகங்களை விடத் தெளிவாகக் குறிப்பிடத்தக்கது ஏதேனும் இருக்க முடியுமா?

முற்கால ஆசிரியர் தத்துவம் இது. இக்கால ஆசிரியர் தத்துவமோ இதற்கு நேர்மாறானது. அவர் எல்லாவற்றிலும் சிறிது சிறிது அறிவுடையவராய், எல்லாம் அறியவல்ல கடவுளின் ரு மேற்போக்கான படிவமாயிருக்க வேண்டும். இயங்கியல், இயைபியல் முதலிய இயல்நூல்கள், கணக்குத் துறைகள், வரலாறு, நிலநூல், நாட்டின் அரசியல், சமயத்துறைகள் எல்லாவற்றிலும் உருப்படியாகக் கொஞ்சம் அவர் தொட்டிருக்க வேண்டும். திரு. 'ஹார்ட்லிப்' பெயருக்குப் படையல் செய்யப் பட்டுள்ள கல்வி பற்றிய கட்டுரை மூலம், இப் பரப்பின் எல்லையை ஓரளவு காணலாம்.

66

‘அறிவுத் துறைகளையெல்லாம் ஆசிரியர் முயன்றறிய வேண்டுவது வேறு எதற்குமல்ல; மாணவர்க்கு அவற்றின் அறிவை ஓரளவு ஊட்டி, அவை பற்றிய அறிவார்வமும் உண்டுபண்ணுவ தாகும்" என்று அவர் குறிக்கிறார். ஆனால், வியப்புக்கிடமான செய்தியாதெனில், இத்தனையையும் அவர் கற்பிக்க வேண்டியது வகுப்பிலல் வகுப்புக் காலங்களிலோ, பாடத்தின் பகுதியாக