(244) || __ __
அப்பாத்துரையம் - 27
வாழ்க்கையில் நன்றியுடையவர்களா யிருப்பதில்லையா?' என்று. ஏராளம் உண்டு. ஆனால், நன்றி, அன்பல்ல. மேலும் இது ஆசிரியர், ஆசிரியராயிருந்த நிலை மாறிய பின்தான் கிடைக்கிறது. பள்ளி விட்டபின் ஆசிரியர் செய்த உதவிக்கு நன்றி செலுத்தும் ஆர்வமிக்க இளைஞர், பயிற்சிக்கால முழுதும் தன்னைத் தந்தை போல் பேணிக் கவனித்த ஆசிரியரிடம் ஒரு சிறிதளவு பற்றுதலும் காட்டியிருக்க முடியாது. அச்சமும் மதிப்பும் தன் காரிய சாதனை நயமும் தான் கொண்டிருக்க முடியும். ஆசிரியர் தயவை நாடி அவனோ, பெற்றோரோ, ஒரு நாள் ஓய்வு கொள்வர். ஓய்வுப்பெற்றால், வீடு சென்று அனைவரும் மகிழ்வடைவர். ஆனால், திரும்பும் நாள் அனைவருக்கும் துயரமே தரும். இந் நிலையில் மாணவனுக்கும் ஆசிரியரிடம் பற்று எப்படி இருக்கக் கூடும்? பள்ளியிடம் வேண்டுமானால் ஓரளவு பற்று இருக்க வழி உண்டு. அவ்வப்போது வெளியே வந்த பின், தோழராய் உள்ளே தங்கள் சிறை வாழ்வில் பங்காளராய் இருந்த மாணவரை எண்ணி அவர்கள் பாசங் கொள்ளக்கூடும். பள்ளி விட்டபின் ஆசிரியரைக் காணும்போதும், நன்றி தெரிவிக்கும்போதும் அவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சிகூட, சிறு பருவக் காட்சிகளைக் காண்பதனாலும், ஆசிரியருடன் சமமாகப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததனாலும் ஏற்பட்டதேயன்றி, அன்பி னாலன்று.
"இவ்வளவு கூறுவானேன்! மாணவர்கள் அன்பைப் பொ றாமை மட்டுமல்ல, ஆசிரியர் வாழ்விலே உள்ள வறுமை! எல்லாருக்கும் உரிய குடும்ப வாழ்வின்பத்தைக் கூட ஒரு ஆசிரியர் இழக்கவே நேரிடுகிறது.என் மனைவியை நான் மணப்பதன் முன் அவள் வெறும் ‘ஆனா' வாயிருந்தாள்.அப்போது நான் அவளிடம் அவள் வருங்கால வாழ்வின் வெறுமையை மறைக்காமல் தெளிவாகச் சித்திரித்துக் காட்டியிருந்தேன். எங்கள் ஏழ்மை மிக்க வீட்டில் என் தாய் சம்பளமில்லா வேலையாளாய். நாள் முழுதும் பரபரப்புடன் ஓடியாடி வேலைசெய்து, அப்போதுதான் கால மாயிருந்தாள். அவள் பொறுப்பை ஒரு சின்னஞ் சிறு பெண் தன்னந் தனியாக ஏற்ப தென்பதே கடினமான காரியம். இது ஒரு மனைவியின் பொறுப்பு. ஆனால், இது போதாமல் ஆசிரியர் மனைவியின்பொறுப்புக்கள் வேறு என் மனைவிக்கு உண்டு. இவ்வளவையும் நான் சித்திரித்த பின்னும், இத்தனையையும்