ஈலியாவின் கட்டுரைகள்
247
னன்றால் பழங்காலக் கட்டடங்களின் அருமை பெருமை அறியாத எவரோ ஒருவர், இடைக்காலத்தில் அப்பழஞ்சுவரை இடித்துப் பாட்டுமில்லாமல், கதையும் படமும் இல்லாமல், ஒரு அந்த சந்தமற்ற புதுச்சுவரை எழுப்பியிருந்தனர்.பாட்டின் அருமை தெரிந்தவர்களுக்குத்தானே வீட்டின் அருமையும், நாட்டின் அருமையும் தெரியும்?
இவ்விடத்தில் என் செல்வக் குழந்தை ஆலிஸின் கண் களிலிருந்து மெல்லிய கண்டனமும், இறுமாப்பும் கலந்த ஓர் ஒளி வீசிற்று. அது ஒரு நொடிப் பொழுதுக்குள் மறைந்து விட்ட தானாலும், அதில் அவள் அன்னையின் பார்வையிலுள்ள பெருமித நகையின் ஒரு சாயல் நிழலாடியதாக எனக்குத் தோன்றிற்று).
வாழ்விலும் தாழ்விலும் ஃவீல்டுப் பாட்டி மக்கள் உள்ளத் திலும் தன் வீட்டிலும் தங்குதடங்கலற்ற அரசாட்சியே செய்து வந்தாள். அவ்வீடு உண்மையில் அவளுக்கே உரியதாக ல்லாமல். அவள் பொறுப்பிலுள்ளதாக மட்டுமே இருந்ததனாலும், அவள் இருக்கும் வரையில் அவள் வாக்கே அவ்வீட்டு வகையில் கடைசி வாக்கா இருந்தது. அவ் வீட்டுக்கு உரிமையுடையவர்களுக்கு அப்பழங்கால வீடு பிடிக்காமல், புதிதாக ஒரு வீடு கட்டிக்கொண்டு போய்விட்டார்கள். ஃவீல்டுப் பாட்டி அவர்களிடம் "இந்த வீடு யாருக்குச் சொந்தமானாலும், அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. இது மக்கள் அன்புக்கும் ஆர்வத்துக்கும் உரியது. இதில் யாரும் கை வைப்பதை நான் விரும்பவில்லை" என்றாள். அவள் இறக்கும் வரை எவரும் அந்த வீட்டை எட்டிப் பார்க்கவேயில்லை. இடமகன்று பழமைச் சுவையுணர்வின் கோயில் போன்றிருந்த அந்த வீட்டை அவள் தன் ஆட்சியிடமாகக் கொண்டு ஆண்டு வந்தாள். ஆனால், அவளுக்குப்பின் அவ்வீட்டின் பெருமையெல்லாம் குன்றிப் போய்விட்டது. அதன் பழங்காலச் சித்திரங்களும், நுண்கலை வேலைப்படாமைந்த தூண்களும், விட்டங்களும் பிரித்தெடுக்கப் பட்டன. வீட்டுக்குரியவரின் புதிய வீட்டினை அழகுபடுத்த அனுப்பப்பட்டன. பாலும் பழமும் தின்னும் பலவகைப் பசுங்கிளி களைக் காடை கவுதாரிக் கூண்டுகளில் வைத்தது மாதிரி, அவற்றின் அழகு இப்போது கண்களை உறுத்துகின்றன.
ய