பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




248

அப்பாத்துரையம் - 27

எள்ளி

வ்விடத்தில் ஜான் முகத்தில் ஒரு சிறு புன்முறுவல் பூத்தது. என்ன மடமை இது' என்று அவன் நகையாடுவதுபோல் இருந்தது. அந்தப் புன்சிரிப்பு).

ஃவீல்டுப் பாட்டி இறந்தபோது அவள் உடலைப் பின்பற்றிப் பல கல் தொலைவுவரைக்கும் ஏழை எளியவர்கள் எல்லாரும், செல்வர்களில் கூடப் பலரும், நீர் கனிந்த கண்களுடன் மௌனமாகச் சென்றனர். அவள் கடவுளிடத்தில் எவ்வளவு பற்று வைத்திருந்தாளோ, அவ்வளவு பற்று அக்கம்பக்கத்து மக்கள் அவளிடம் வைத்திருந்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது. அவளும் அவர்களுள் தன்னை வந்தடுத்த எவரிடமும் ஆதரவாகப் பேசி அவர்கள் குறைகளைத் தீர்க்காமலிருந்ததில்லை. அவள் நல்ல சமயப்பற்று உடையவள். ஆனா அது இக் காலத்திலுள்ள சில சிடு மூஞ்சிக்காரர்களின் பகட்டான சமயப்பற்று அல்ல. அவள் சமயப்பற்றின் வாய்மையை அவள் வழிபாட்டமைதியில் மட்டுமன்றி, மக்களிடமும் பிள்ளை களிடமும் அவள் காட்டிய அன்பிலும் காணலாம். இத்துடன் வழிபாட்டுப் பாடல்களும் பழைய ஏற்பாடு முழுவதும் புதிய ஏற்பாட்டின் பல பகுதிகளும் அவளுக்குப் படிக்காமலே மனத்தில் படிந்திருந்தன.

(ஆலிஸின் மெல்விரல்கள் இச்சமயத்தில் புத்தகம் புரட்டுவது போலக் கூடிக் கூடி நெகிழ்வுற்றன).

ஃவீல்டுப் பாட்டி பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்கை களையும் பெற்று வளர்த்தவளானாலும், அவள் சிறுவயதில் அந்தப் பக்கத்திலேயே எல்லாப் பெண்களிலும் நல்ல உயரமும், நிமிர்ந்த நடையும், நய நாகரிகமும் உடைய வளாயிருந்தாள். குடும்ப நடன விருந்துகளில் எந்தப் பெண்ணும் அவளுக்கொப்பாக ஒசிந்து நுடங்கி ஆடமுடியாது. அவள் கால்கள் நிலத்தில் பதியுமோ, பதியாதோ என்றிருக்கும்!

(ஆலிஸின் கால் பெருவிரல்கள் இச்சமயம் நிலத்தில் ஊன்றி வட்டமிடத் தொடங்கியிருந்தன. நான் அதைச் சற்றுக் கூர்ந்து பார்த்ததும், அது நின்றுவிட்டது).

பிற்காலத்தில் ஒரு கொடிய நோய் வந்து அவள் உடல் வனப்பைக் கெடுத்துக் குறுக்கி விட்டது. ஆனால், எந்த நோயும்