பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஈலியாவின் கட்டுரைகள்

249

அவள் உள்ளத்தின் அழகைக் கெடுக்கவில்லை. அவள் என்றும் யாரையும் கண்டு சினந்து பேசவோ, அல்லது எந்த வேலையை யும் அடுத்தவரிடம் விட்டு விட்டுச் சோம்பியிருக்கவோ செய்ய வில்லை. நூறு மனிதர் நூறு இடங்களில் பார்க்கும் வேலையை அவள் ஒருத்தியே எங்கும் சுழன்று சுழன்று சென்று பார்ப்பாள். அவள் தன் வகையில் செலவு செய்தது மிகவும் குறைவு. அவள் கைப்பணத்தின் பெரும்பகுதி மற்றவர்கள் வகையில்தான் செல வாகும். அவள் உள்ளம் தூய்மையுடையதாயிருந்தது போலவே, ஒரு போர் வீரனின் அஞ்சா உறுதியும் உடையதாக இருந்தது. இவ்வளவு பெரிய வீட்டில் முழுக்க முழுக்க வெற்றிடமாகக் கிடக்கும் பல பாரிய கூடங்களிடையே, ஒரு அகன்ற அறையில், அவள் சிறிதும் அச்சமின்றித் தனியே படுத்து உறங்கி வந்தாள்.

இதில் அதிசயம் என்னவென்றால், எல்லாப் பழங்கால மனிதர்களையும் போலவே, அவளுக்கும் ஆவிகள் வகையில் நம்பிக்கையுண்டு. பல இரவுகளில் நடுச் சாமத்தில் இரு குழந்தை களின் உருவங்கள் மாடிப் படிகளில் தவழ்ந்து தவழ்ந்து ஏறி, அவள் படுக்கையண்டைவரை வந்து, அவளைப் பார்த்துக் கொண்டே நிற்குமாம்! 'இந்த ஆவிகள் அறியாச் சிறு குழந்தை களின் ஆவிகள். அவை எவ்விதத் தீங்கும் செய்யமாட்டா' என்று எண்ணிக்கொண்டு, அவள் அப்பிள்ளைகளைப் பார்த்துக்

கொண்டே அமைதியாகப் படுத்திருப்பாளாம்! ஆனால், இவற்றைக் கேட்ட நான், என் செவிலித் தாயுடன் கூடவே படுத்திருந்தால்கூட, அடிக்கடி அரை இருட்டில் ஆவி உருவங்கள் எண்ணி நடுங்காமலிருக்க முடியவில்லை. எனினும் இதுவரை நான் அந்தக் குழந்தைகளைப் பார்த்ததே கிடையாது.

(ஜான் தன் கண்களை அகலத் திறந்து, தானும் ஃவீல்டுப் பாட்டியைப் போல் உறுதியாயிருக்க வேண்டும் என்று கருதியதை நான் இச்சமயம் கவனித்தேன்.)

ஃவீல்டுப் பாட்டிக்குத் தன் பேரப்பிள்ளை அனைவரி த்திலும் மிகுந்த அன்பு உண்டு. அந்தப் பெரிய வீட்டில் நாங்கள் எங்கள் மனம் போல எவ்வளவு அமர்க்களம் பண்ணினாலும், அவள் புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டுதான் இருப்பாள். என்னைப் பற்றியவரையில் எப்போது கோடை விடுமுறை வரும்,