பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 27

250 || எப்போது பள்ளியில்லம் விட்டுப் பெரிய வீட்டில் போய்க் களிப்புடனிருக்கலாம் என்றுதான் நினைத்துக்கொண்டிருப்பேன்.

அந்த வீட்டின் வெளிப்புறச் சுவர்களில் உரோமப் பேரரசை ஆண்ட பன்னிரண்டு ஸீஸர்களின் படங்களும் வரிசை வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அவைகளைப் பார்த்துக் கொண்டேகூட நான் ஒரு நாள் முழுவதும் போக்கிவிடுவேன். அவ்வீட்டின் அரங்கில் அங்கங்கே சிதலரித்துப்போன பழைய பட்டு மேற் கட்டிகளும் பொற்பூவேலை செய்த, ஆனால், பல இடங்களில் கிழிந்து நைந்து தொங்கிய, அழகிய தூக்குப் படாங்களும் திரைச் சீலைகளும் இருந்தன. அவற்றைப் பார்த்து அவ்வீட்டின் பொங்கற்கால வாழ்க்கையை நான் மனத்தில் உருவகப்படுத்திக் கொள்வேன்.

அவ்வப்போது தோட்டங்களில் சுற்றித் திரிந்தே நான் பொழுது போக்குவேன். ஒன்றிரண்டு தோட்டக்காரரைத் தவிர அங்கே வருபவர் யாருமில்லை. தோட்டக்காரரும் எங்களை எதுவும் சொல்லமாட்டார்கள். தோட்டம் காடாய் வளர்ந்திருந்த தனாலும், ஆங்காங்குச் சிறிதுசிறிது செப்பம் செய்யப் பட்டிருந்தது.சுவர்களில் கொவ்வைக் கொடியும் பிற கொடிகளும் படர்ந்திருக்கும். அவற்றிடையே பழங்கள் பறிப்பாரற்றுப் பழுத்துக் கனிந்து கிடந்தாலும், நான் அவற்றை என்றும் தொட நினைத்ததில்லை. அப்பழங்களைத் தின்பதினும், அவற்றைச் சுற்றிப் பார்வையிடுவதிலேயே எனக்கு இன்பம் மிகுதி.

(தந்தையின் பண்பு தன்னிடத்திலும் உண்டு என்று காட்டு பவன் போல, ஜான், எனக்குத் தெரியாமல் ஆலீஸுடன் பங்கிட்டுத் தின்ன எடுத்த பழங்களை எல்லாம், மீண்டும் தட்டத்திலேயே வைத்துவிட்டான். கதை கேட்கும் இன்பத்தினும் அப்பழம் தின்னும் இன்பம் பெரிதல்ல என்று அவன்

எண்ணியிருக்க வேண்டும்.)

ஃவீல்டுப் பாட்டிக்குப் பேரப்பிள்ளைகள் அனைவரிடமும் பொதுவாகப் பற்று மிகுதியானாலும், அவள் உள்ளத்தில் மிகப் பெரும் பகுதியிடத்தையும் பெற்றது சிற்றப்பா ஜான் இலா-தான், ஜான் நல்ல அந்தசந்தமான தோற்றமுடையவர் மட்டுமல்ல, நல்ல சூட்டிப்பும் சுறுசுறுப்பும் மிக்கவர். எங்களிடையே அவர்தான் முடி மன்னர்.