பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஈலியாவின் கட்டுரைகள்

253

என்

(என்னால் இதற்கு மேல் பேசமுடியவில்லை. முன்னிருந்த குழந்தை ஆலிஸின் கண்ணில் அவர் அன்னை ஆலிஸின் கண்ணிற் கண்ட அதே ஒளியைக் கண்டேன். என் கண்முன் இருப்பது குழந்தை ஆலிஸ்தானா, அல்லது அந்த..

என் தலை சுழன்றது. குழந்தை ஆலிஸின் கண்ணொளி பரந்து ஒளி வீச வீசக் குழந்தை ஆலிஸ் மறைந்து, ஆலிஸின் உருவம் நிழலாடத் தொடங்கிற்று. அதனூடாகக் குழந்தைகளின் வடிவம் மெல்ல மெல்ல மங்கித் தொலைவில் பின்னாடியே செல்வது போலிருந்தது. இறுதியில் அவர்களின் இரு சிறு முகங்கள் மட்டுமே தொலைவெளியில் சென்று, வானவிளிம்பில் நின்று, சற்று உற்று நோக்கித் தயங்கி மறைந்தன. அவ் வுருவங்கள் எதுவும் என்னிடம் வாய்திறந்து போசாவிட்டாலும், அவை என் உள்ளத்தின் காதில் தம் உளந்திறந்து இச் சொற்களை முழங்கினதுபோல எனக்குத் தோற்றிற்று. "நாங்கள் ஆலிஸின் சிறுவரும் இல்ல; உன் சிறுவரும் அல்ல. மற்றும் ஆலிஸின் சிறுவர் ‘அப்பா' என்றழைப்பது 'பெர்ட்ர’த் தையே. நாங்கள் போலி வடிவங்கள் - போலியினும் குறைந்த இயல்பே யுடையவர்கள்- வெறும் கற்பனைத் தோற்றங்கள்! நாங்கள் என்றும் இருந்தவர்களுமல்ல, இருப்பவர்களோ, இருக்கப் போகிறவர்களோகூட அல்ல, இருந்திருக்கக் கூடியவர்கள்- இருக்க வேண்டும் என்ற அவா- இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம்- இருந்திருந்தால் என்ற நைப்பெண்ணம் ஆகியவற்றின் விளைவான கற்பனைகளே நாங்கள்”.

மாயக் குழந்தைகள் அளித்த விளக்கம் என் மாயக் கனாத் தோற்றத்திற்கு ஒரு முடிவு கட்டியது. மெய்யெல்லாம் சுட் டெரிக்கும் கோடைகால உச்சிப்போதின் வெப்பத்திடையே, கொட்டாவியிட்டுக் கொண்டு நான் விழித்துக்கொண்டேன்.என் கனவு வாழ்வுக்கு நேர்மாறுபட்ட என் மெய் வாழ்வு பட்டப் பகலென நாற்புறமும் கண்ணை எறித்தது. காதலைக் கட்டிவைத்து விட்டுக் கட்டற்ற செல்வனாக நானும், அதேபோலக் கட்டற்ற முது கன்னியாக என் இல்லத்தில் வாழ்ந்த என் ஒன்றுவிட்ட உடன் பிறந்தாள் பிரிட்ஜட் ஈலியாவும் எங்கள் புத்தக அன்பர்களிடையே உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். ஜானின் நினைவுக்கும், பண்டை நாள் இளமைத் தோழமை கொண்டிருந்த ஆலிஸின் நினைவுக்கும் ஒரு நீண்ட வணக்கம் செலுத்தினேன்.