பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 27

256) || அதனினும் இருண்ட பாழுங்குகை, உயரத்தினின்றும் அதற்கும் மேற்பட்ட உயரம் என மேலேறிச் செல்கின்றனர். வீடு கட்டும் கொத்தர் புகையேறிச் செல்வதற்குத்தான் புகைப்போக்கி கட்டினர்.மனிதர் ஏறுவார் என்றா- அதிலும் குழந்தைகள் ஏறும் என்றா-படிகட்டி வைத்துள்ளனர்! மனிதர் வசதிக்காகவே வீடு கட்டுவதாக இக் கொத்தர்கள் பெருமைகொள்கின்றனர். இப் புகைப் போக்கிகளை அமைக்கும் போது மட்டும், இதனைத் தூய்மைப்படுத்த மனிதர்கள் ஏறிச் செல்வர், குழந்தைகள் ஏறிச் செல்லும் என்று அவர்கள் எண்ணவில்லையோ என்னவோ? நாம் மேலே குறிப்பிட்டதுபோல், அவர்கள் தெய்வப் பிறவிகள் என்று அவர்களுக்கும் தெரியும் போலும்! இல்லாவிட்டால் அவர்கள் மாடிகளுக்கு வகுத்த ஏணிப்படிகள் போல, இங்கும் வகுத் திருப்பார்கள் அல்லவா?

தன்

ஆண்டவன் திருக்கோபத்தால் உலகமெல்லாம் ஊழி வெள்ளத்தில் அழிந்தபோது, அதில் தனி ஒருவனாகத் தப்பிய நோவா, 'இத் திருக் கோபத்துக்கு நம் சந்ததியார் எப்படித் தப்பி வாழப் போகிறார்களோ?' என்று கவலை கொண்டானாம்! அதை அறிந்த ஆண்டவன் “இனி நாம் இது போல் கோபமும் தண்டனையும் தரமாட்டோம். இனி திருக்கருணை தனி உருவுடன் நடமாடும்” என்று காட்டும் அறிகுறியாக, நோவாவுக்கு ன் வானவில்லாகிய கொடியை வானில் உயர்த்திக் காட்டினாரென்று விவிலிய நூலால் அறிகிறோம். அதுபோலவே, 'இப்பாழுங் குகையுட் சென்று இவன் மறைந்தே போய்விட்டான். இனி இவன் வெளியே வரப்போவது ஏது' என்று நாம் முற்றிலும் மனம் முறிவுறும்போது, 'இதோ' என்று புகைப்போக்கியின் மறுபுறத்தில், வானத்தின் வாயில் போன்ற ஒளி வட்டத்தில், நம் கறுப்புத் தெய்வத்தின் தூரிகைக் கொடி மே லோங்கி வீசி நமக்கு நம்பிக்கையளிக்கிறது! ‘மற்ற வெள்ளைக் குழந்தைகள் அஞ்சும் என் குகைக் கோபுரத்தில் என் கறுப்புச் சின்னங்களை பரிபூரணமாக கொண்ட என் கரும் பூசுரக் குழந்தை களுக்கு எந்தத் தீங்கும் வராமல் நான் காப்பேன்' என்று புகையிருள் தெய்வம் காட்டும் வானவில் போன்றிருக்கிறது, இத் தூரிகை!

“கையில் ஒரு மரத்தை ஏந்திக்கொண்டு வரும் ஒரு குழந்தை வடிவம் தோற்றமளிக்கிறது” என்ற ஒரு நாடகக் குறிப்பு ஷேக்ஸ்