பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஈலியாவின் கட்டுரைகள்

257

பியரின் மாக்பெத் நாடகத்தில் காணப்படுகிறது. அது கேட்டு நாம் மயிர்க்கூச்செறிகிறோம். ஆனால், இங்கு நாம் அதே உருவத்தை நேரடியாகக் காண்கிறோம். எனினும் இங்கு நம் உணர்ச்சி அதிர்ச்சியன்று, அதிர்ச்சி நீக்கமும், ஆறுதலுமே.

வாசக அன்பரே, இக் கரங்குலத் திருச்செல்வரை நீர் என்றாவது புலர் காலையில் எழுந்து செல்லும்போது கண்டால், அவருக்குக் கூடிய மட்டும் ஒரு கால் துட்டுக் கொடுக்கத் தவறா தீர்கள். ஆயிரம் கோயில்களுக்குக் கொடுக்கும் புண்ணியத்தைவிட இது உயர் புண்ணியமாயிருக்கும்- உலகத்தார் கண்களிலல்லா விட்டாலும் கடவுள் கண்களில் நற்புண்ணியமே என்பதில் ஐயம் வேண்டாம். குழந்தையுடன் குழந்தையான, உம் சின்னஞ்சிறு தம்பி தங்கையர் போன்ற அவர்கள், கடும்பனியில் பரல் கற்கள் குதிங்காலில் குத்திக் கொப்புளங்கள் எழுந்து வேதனைதரக் கதறிக்கொண்டு வருவதாயிருந்தால்- இக்காட்சி காணற்கரிய தல்ல- உம் இரக்க உணர்ச்சிக்கும், உம் சட்டைப் பையின் துட்டுக்கும் அது இன்னும் சற்று மிகுதியான சோதனையாகக்கூட அமையலாம்! "இங்கே கொடுப்பவன் அங்கே பதிற்றிரட்டி பெறுவான்” என்பதில் உமக்கு நம்பிக்கையில்லாதிருந்தால் கூட, "இங்கே கொடுப்பதால் இக் காட்சியைச் சிறிது மறக்கலாம்" என்பதற்காகவாவது, பையி லுள்ளதை யெல்லாம் கொட்டிக் கொடுங்கள். ஆனால், உங்கள் கையில் ஒன்றுமில்லாமல் போய் விட்டாலோ, உங்கள் மனத்துன்பம் அவர்கள் துன்பத்துக்குத் துணையாகவாவது செல்லட்டும்- அவ்வளவுதான்! துன்பத்தைத் தணிக்கப் பணம் ஒரு சிறிதே உதவும்; துன்பத்துக்கு ஆறுதல் தருவதில் துன்பத்தைவிடச் சிறந்தது வேறு எதுவும் கிடையாது.

மனிதர் இன்பத்தில் மகிழ்வார்கள்; துன்பத்தில் துயருறு வார்கள். துன்பத்தைக் காண்பதுகூட மனிதருக்கு துயரந்தான். ஆகவே, இக்கருங் குழந்தைகளைக் கண்டு மனத் துன்பமடைவது நமக்கு இயல்பே. ஆனால், ‘காணும் நமக்கு இருக்கும் இதே துன்பம் அவர்களுக்கும் இருக்கும்- நம் துன்பத்தைவிட அவர்கள் துன்பம் மிகுதியாயிருக்கும்' என்றெல்லாம் நினைத்துவிட வேண்டாம்! நாம் இரங்குவது, அவர்களைப் பார்க்கும் நமது துன்பத்தைக் குறைக்கவேயன்றி வேறல்ல! நாம் கொடுக்கும் கால் துட்டு அல்லது அரைத் துட்டு, அன்றைப் பொழுதைக்கு