அப்பாத்துரையம் - 27
(258) || அவர்கட்குச் சிறிது பயன்படுவது உண்மைதான்.ஆனால், அதன் பெரும்பயனை அடைபவர்கள் அவர்களல்ல, நாம்தான்! அவர்கள் பல நாளையக் கடுந்துன்பத்தை இது ஒரு சிறிதும் குறைத்துவிடாது. ஆனால், ஒரு நாள் கொடுத்தோம் என்ற எண்ணமே நமக்குப் பல நாள் இக்காட்சியை நினைப்பதால் ஏற்படும் நம் மனச்சாற்றின் குத்தல்களைக் குறைத்துவிடும். ஒரு நாள் காட்சியில் நாம் அடையும் துன்பத்தை அவர்கள் ஒரு துன்பமாகக் கொள்பவர்களேயல்ல. துன்பமே இல்லாத உலகமொன்றிருந்தால், அவ்வுலகத்தில் இன்பமே துன்பமாக இருக்கும். அது போலவே இன்பம் இன்னதென்பதையே அறியாதவர்களாய், துன்பத்திலேயே பிறந்து வளர்ந்து, அதிலேயே வாழ்நாள் கழிக்கும் நம் புகைக் குலத்தவர்களுக்குத் துன்பமே வாழ்க்கை யாகவும், வாழ்க்கையின் இன்பமாகவும் பழகிப்போய்விட்டது.பசியும் உழைப்பும் அவர்களது வாழ்க்கை கிடைத்தபோது உண்ணும் உணவும், குடிக்கும் பச்சைத் தண்ணீரும் அவ்வாழ் வினிடையே ஒருசிறு மாறுதலும், ஒரு சிறு ஆறுதலும் மட்டுமே தருவன. எனவேதான் நாம் நினைப்பது போல, துன்பத்தில் துயரமடையவும் அவர்கட்குத் தெரியாது; யாரேனும் உதவி செய்ய முன்வந்தால் அவர்கள் அதை ஒரு சிறு ஆறுதலாகக் கொள்வதன்றி, நன்றியுணர்ச்சியும் காட்ட அறியமாட்டார்கள். துயரார்ந்த அவர்கள் நீண்ட வாழ்க்கைக் கனவிடையே, அது அவர்களுக்கு ஒரு சிறு கனவு- அவ்வளவு தான்!
மனிதர் உணவையும் குடிநீரையும் பசி தீர்ப்பதற்கு மட்டும் உட்கொள்ளவில்லை. சுவை இன்பத்தையும், மன எழுச்சியையும் அவற்றிலிருந்து எதிர்பார்க்கின்றனர். ஆனால், ஒட்டடைக்குலம் உணவையும் குடியையும் பசி, விடாய் என்ற வாழ்க்கைப் பிணி களை அவ்வப்போது சிறிது தணித்துவைக்க உதவும் மருந்து களாகவே கொள்கின்றனர். உணவும் குடியும் தருபவர்களிடம் அவர்கள் காட்டும் உணர்ச்சியும், மருந்துதரும் தாய்மாரிடம் பிள்ளைகளுக்கு இருக்கும் உணர்ச்சியிலிருந்து வேறுபடாத தாயிருப்பது இதனால்தான். அவர்கள் உணவு என்று உட் கொள்வது உண்மையில் நமக்கு மருந்தைவிடக் கசப்பும் வெறுப்பும் ஊட்டக் கூடியதாகவே இருக்கும். குடிவகையோ நினைத்தால்கூட நமக்கு ஓங்கரிப்பாகவே இருக்கக்கூடும். ஆனால்,