பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஈலியாவின் கட்டுரைகள்

காலைக்

259

அவர்கள் பார்வையில் குடி ஒரு மாய மருந்து. பகலின் கடு உழைப்பையும் துன்பத்தையும அது இரவில் மறையச் செய்கிறது. கடும்பனியில் வேலை தொடங்குவதற்கு, அது அவர்கட்குத் தெம்பளிக்கிறது. ஆனால், இந்த மாய மருந்தைப் பெறுவதற்கு அவர்களுக்கு இன்னொரு மாய மந்திரம் தேவையாயிருக்கிறது. நீங்கள் காலையில் அவர்களுக்குக் காடுக்கும் கால் துட்டு அல்லது அரைத் துட்டுக்கள்தான் இரண்டாவதாகக் கூறப்பட்ட இம்மாய மந்திரங்கள்! இவை அவர்கள் வாழ்க்கையை மாற்றிவிடமாட்டா. ஆனால், அன்றையப் பொழுதை மாற்றிவிடும். அம்மந்திரத்தின் மாய ஆற்றல் முதல் மாய மருந்தை விற்கும் முச்சந்தி மருத்துவர் மனத்தை இளகச் செய்து, அவர்கட்கு ஒரு அரைக்கோப்பை சூடான, கடு வீச்சமுடைய தேநீரை அளிக்கும்படி தூண்டும்.

தேநீர் என்று அவர்கள் கூறுவது நம் உலகிலுள்ள, தேவை யிலிருந்து நாம் வடிக்கும் நீர் அல்ல. தென் அமெரிக்க நாடுகளி லிருந்து அதனினும் அருமையாகக் கண்டெடுத்து அவர்களுக் கென்று அனுப்பப்படும் ஒரு புதுமையான மரப்பட்டையே அது. தேயிலை நாவுக்குச் சுவையும் மனதுக்குக் கிளர்ச்சியும் தரும். இதுவோ நாவுக்குக் கசப்பும் மனத்துக்கு வீறாப்பும் தரும். உணவுக்கு அடுத்தபடி ஒட்டடைக் குடியினர் வாழ்வுக்கு இன்றியமையாத் தேவையாவதும், உணவைவிட அவர்களுக்கு மிகுதி ஊட்டந் தருவதும் இது ஒன்றே என்னலாம்.

மக்கள் உயர் பண்பாட்டையும் உயர்குடிப் பிறப்பையும் நல்லாடையணியிலும், இன்னுரையிலும் செயற்கைப் பகட்டு களிலுந்தான் பார்க்க வேண்டுமென்றால், ஒட்டடைக்காரர் குடியை உயர்குடி என்று கூறமுடியாதுதான்! ஆனால், துன்பங்கண்டு தளராத உறுதி பசி நோயும் உடல் துன்பமும் அன்றி வேறு நோய் அறியா உடல் உறுதி, அழுக்கான சூழ்நிலைகளிடையே வாழ்ந்தாலும் உள்ளத்தில் அழுக்கும் அழுக்காறும் இல்லாமை ஆகிய இவை உயர்குடிப் பண்பானால், ஒட்டடைக் குலத்துக்கு ஈடான உயர்குடி எதுவும் இல்லை என்னலாம். ஆனால், உயர் குடியாளர் எவருக்கும் கிட்டாத உயர்குடிப் பண்பு ஒன்று இத் திருக்குலத் தவருக்கு இயற்கையாய் அமைந்திருக்கிறது-அவர்கள் பற்கள் அவர்கள் உடலிருளையும்,