(260) ||
அப்பாத்துரையம் - 27
பனியிருளையும் கிழித்துக்கொண்டு ஒளிவீசுகின்றன. அவர்கள் புறவாழ்வு எத்தனை தளர்ச்சியுற்றி ருந்தாலும் அவர்கள் உண்மையில் ஒரு பழங்கால உயர்குடிப் பிறப்பின் மரபுடையவர் என்பதை இவ்வரிய பண்பு நன்கு எடுத்துக் காட்டுகிறது. வகைவகையான நறுந்தூளும் மென் குழம்பும் இட்டுத் துலக்கியும், வெள்ளி தங்கப் பூணிட்டும் நம் உயர் குடியாளரின் பற்கள் இத் திருந்திய உருவம் பெறுவதில்லை!
திருக்குலத்தவர் பண்டைய உயர் பிறப்பைக் காட்டும் இன்னொரு செய்தியையும் என்னால் குறிப்பிடாதிருக்க முடிய வில்லை. அவ்வப்போது, அண்மையில் ஏற்பட்டதுபோல, உயர் குடியாளர் வீட்டில் புகையும் ஒட்டடையும் அடிக்கும் சிறுவர்கள் எப்படியோ அவ்வீடுகளின் அகன்ற மேல் முகட்டுப் பரப்பிடையே காணாமற்போய், இறுதியில் தற்செயலாய் அவர்கள் மெல்லிய பஞ்சணைகளிடையே காணப்படுவ துண்டாம்! சிறு வீடுகளில் உழைப்பதைவிட இப்பெரிய வீடுகளில் அவர்களுக்கு உழைப்புக் கூடுதல்- ஆனால், வருவாயும் கூடுதலாகத்தானே இருக்கும்! இச் சின்னஞ் சிறு குழந்தைகள் இச் செல்வச் சீமான்கள் வீடு பார்த்துக் களைப்படைவானேன்? களைப்படைந்தாலும், விழுந்தாலும் இப் பஞ்சணைகளில் வந்து காணப்படுவானேன்? இவற்றை அவர்கள் கனவில் கண்டதும் கிடையாது. எண்ணுவதும் கிடையாதே! குலமரபு காரணமான இயற்கை உணர்ச்சி ஒன்றன்றி வேறு எதுவும் அவர்களை இந் லை கொள்ள உள்ளார்ந்த தூண்டுதல் கொடுத் திராது. தன்னுணர்வுடைய காலத்தில் அவர்கள் செய்யத்துணியாத செயலை, களைத்து உணர்விழந்த சமயத்தில் செய்வது இப் பழமரபின் வாசனையாகத்தானிருக்க வேண்டும் என்று கூறலாம். இயற்கைப் பழம் பண்பாட்டிலும் பழங்கலையிலும் கருத்துச் செலுத்தும் என் போன்ற பழமைப் பற்றாளர்கள் பழங்கலையிலும் கருத்துச் செலுத்தும் என் போன்ற பழமைப் பற்றாளர்கள் உள்ளத்தை இச் சின்னஞ்சிறு சிறுவர்கள் கனியவைப்பதற்கும் இப்பழங் குடிமரபே காரணமாயிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.