ஈலியாவின் கட்டுரைகள்
267
சேமிப்பு என்று தெரிந்ததாம்! நாள் தோறும் பொருளகம் செல்லும்போது கணக்கர் குருடு கூன் தேடி ஒரு துட்டுப் போடுவாராம். குருடனாயிருந்த இப் பிச்சைக்காரன் அவர் குரலறிந்து அவர்மீது நன்றியும் நல்லெண்ணமும் கொண்டு, இறக்கும் தறுவாயில் இச்செயலால் நன்றி தெரிவித்துக் கைம்மாறும் செய்தான். இச்செயல் அவன் நன்றிக்கு மட்டுமன்றி அவன் உழைப்பு, அவன் சிக்கனம், அவன் விடாமுயற்சி ஆகியவற்றுக்கும் சான்று தருகின்றது. ஆனால், நம் சீர்திருத்த வாதிகளின் சிறுமை யுள்ளத்தில் அவன் செயலில் காணப்படும் குணம், அவன் பணம் திரட்டி விட்டான் என்பதே! பல பிச்சைக்காரர் குடிக்கின்றனர். பணத்தை வீணாக்குகின்றனர் என்று குறைகூறும் இவர்கள், குடிக்காது வீண் செலவு செய்யாது, நாற்பது ஆண்டுகளில் இப் பெருந் தொகையைச் சிறுகச் சிறுகச் சேர்த்து, அதையும் ‘நன்றி’ என்னும் உயர் கடமை உணர்ச்சிக்கு அர்ப்பணித்ததை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை!
கால்கள்
இன்னொரு பிச்சைக்காரர் நாற்பது ஆண்டுகட்கு முன் நிகழ்ந்த ஒரு விபத்தில் இரு கால்களையும் இழந்துவிட்டார். இரண்டுகால்களும் அவருக்குக் கட்டைக்கால்கள்தான். ஆனால், இக் கட்டைக்கால்களுடன் அவர் உயிருள்ள உடையவர்களும் வியக்கும்படி எங்கும் பரபரப்பாகத்திரிவதுடன், எவரும் வியக்கும் கடும் பாரந் தூக்கியும், கட்டைகள் பிளந்தும் வந்தாராம். கீழ்ப் பகுதியற்ற அவர் உடலிலுள்ள பாதி சிறிதும் தளர்ச்சியின்றி ஒரு உடற்பயிற்சியாளன் உடலையும் தோற்கடிக்கும் வலுவும் கட்டமைப்பும் உடையதா யிருந்தது. பாதி உடல் மனிதனாகவும் பாதி குதிரையாகவும் இருந்ததாகப் பழம் கதையில் கூறப்படும் உருவந்தான், குதிரையுடலான பாதி நீத்து இயங்கு கிறதோ என்னும்படி யிருந்தது அவர் உடல் வளர்ச்சி. அவர் பிச்சைக்காரர் என்று கூறப்பட்டதுகூட அவர் சோம் பேறித்தனத்தின் காரண மாகவன்று: அவர் அரையுடல் குடும்ப வாழ்வுக்கும் சமூக வாழ் வுக்கும் பொருத்தமற்றது என்ப தற்காகவே. ஏனெனில், வீடற்ற அவர் பல வீடுகள் கட்ட உதவியதுண்டாம்! குடும்பமற்ற அவர் பல குடும்பங்களின் கடுவேலைகளை எளிதில் செய்வாராம்! குணத்திலும் அவர் ஒரு தங்கக் கட்டியாகவே இருந்தார். அவர் எவருடனும் இன் மொழியே பேசினார். அரை மனிதரான அவரைப் பார்க்கக் கூடிய