268 ||
அப்பாத்துரையம் - 27
முழு மனிதர்களின் கூட்டமே அவர் உயர்வைப் புகழ்ந்து அதற்குச் சான்று கூறுகின்றது!
எனவே, மொத்தத்தில் பிச்சைக்காரர்களையும் நகர வாழ் வையும் சீர்திருத்த நல்ல வழி, நகர மக்களில் ஒரு பகுதியினரான பிச்சைக்காரர் வாழ்வையும் நகர மக்கள் வாழ்வுடன் சேர்த்துத் சீர்திருத்துவதேயன்றி, அவர்களைத் துரத்துவதோ, சிறைக்கூடங் களிலும் உழைப்புக் கூடங்களிலும் அடைப்பதோ அல்ல. மக்கள் யாவராலும் விரும்பப்படும் இவ் வகுப்பை- மற்ற வகுப்பினர் எவரிடமும் இல்லாத சமத்துவ உணர்ச்சி, பொறாமையின்மை ஆகிய நற்பண்புகளையுடைய இவ்வகுப்பு மக்கள் வாழ்வுக்கு உகந்த ஒரு நல் உறுப்பைப் பயன்படுத்தி, அவர்கள் வாழ்க்கையின் இன்னல்களைக் குறைத்து அவர்களை வளர்த்தால், நகரமும் நகர வாழ்வும் வளம் பெறும் என்பதில் ஐயமில்லை. அவர்களைச் சோம்பேறிகளாக வைத்திருக்க வேண்டாம். ஆனால், அவர்கள் சுதந்திரத்தையும், வாழும் உரிமையையும் குலைக்கவும் வேண்டாம். மனித சமூகத்துக்கு அவர்கள் செய்யும் கடமையை உணர்ந்து அதைப் பெருக்கும் வகையில் அவர்களைப் பண்படுத்தினால் போதும்!