II. மனித உலகில் அடிசிற்கலை:
அது தோன்றிய வகை பற்றிய விந்தையான வரலாறு
"மனித வகுப்புத் தோன்றி முதல் எழுபதினாயிரம் ஆண்டுகள் வரை மக்கள் காய் கிழங்கு இறைச்சி வகைகளைப் பச்சையாகவே தின்று வந்தனர். இறைச்சியைக்கூட அவர்கள் அபிஸினியாவிலுள்ள இக்கள் இன்றும் தின்பதுபோல் கடித்தும் பல்லால் உராய்ந்துமே தின்றுவந்தனர். உலக வரலாறு பற்றிய தம் நூலில் கன்ஃபூலியஸ் பெருமான் இக்காலத்தைப் பற்றிச் சற்று மறை குறிப்பாகவே கூறுகிறார். இதனை அவர் ‘சோஃபங்’ அதாவது சமையற்காரர் ஓய்வுக்காலம் என்று அழைக்கிறார்”. இக் கருத்துக்கள் என பார்வைக்கு என் நண்பர் ஒருவர் கொண்டுவந்து காட்டிய சீனக் கையெழுத்துப்படி ஒன்றில் காணப்படுகின்றன.
இதே கையெழுத்துப்படி இரண்டாவது மனித உலகின் ஊழிபற்றிக் குறிப்பிடுகையில் மக்கள் முதலில் இறைச்சிகளைச் சுட்டும், பின் வதக்கியும் பொரித்தும் கலந்தும், நாளடைவில் சமையற்கலையின் எல்லாப் பகுதிகளிலும் முன்னேற்றமடைந்த வரலாற்றை விளக்குகிறது. இதில் முதன் முதல் மக்கள் இறைச்சி சுடக் கற்றுக்கொண்ட வகை ஒரு சுவைமிக்க விந்தைக் கதையாக விரித்துரைக்கப்படுகிறது. சீனர்களைப் போல் நாம் அக் கதையை அப்படியே நம்பிவிடத் தேவையில்லையானாலும், அதன் பரந்த கருத்தை அறிவாராய்ச்சி முறையில் ஒத்துக்கொள்ளவே வேண்டும். அத்துடன் அக்கதையின் சுவை, மொழியும் இனமும் தொலையும் கடந்து, நமக்கும் இன்பளிப்பதாகவே உள்ளது.
பன்றி மேய்ப்பவனாகிய ஹோற்றி தன் பன்றிகளுக்கு வேண்டிய காய் கிழங்குகள் திரட்டிக் கொணரக் காட்டிற்குச் சென்றிருந்தான். சிறிது குறும்புத் தனமும் முரட்டுக் குணமும் உடைய அவன் புதல்வன் போ-போவிடம் தன் பன்றிகளை நன்கு