பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(270) ||__ __

அப்பாத்துரையம் - 27

பார்க்கும்படி கூறிவிட்டுச் சென்றிருந்தான். அவன் சென்று மீளுமுன் போ-போ மறதியாக ஒரு கொள்ளியை வைக்கோற் கட்டொன்றின் மீது போட்டதனால், அதுவும் வீடும் தீப்பற்றிக் கொண்டன. அவனும் அவன் அலறல் கேட்டு அண்டை அயாலரும் எவ்வளவு முயன்றும், தீயை அணைக்க முடியாமல் போயிற்று. மனித வகுப்பின் அக்கால நிலையில் வீடுகள் முழுவதும் கம்பும் குச்சும் தழைகளுமாகவே இருந்தபடியால், அதில் ஒரு துரும்புகூட மீதமின்றி எல்லாம் எரிந்து போயிற்று. கம்புகுச்சுகளே கொண்ட வீடு போனதுகூட எவருக்கும் பெரிதாகத் தோற்றவில்லை. குட்டியிட்ட அவர்கள் தலைசிறந்த பன்றியொன்று, அது புதிதாக இட்டிருந்த குட்டிகளும் தீயில் வெந்து போயின.

தந்தை வந்து பார்த்தால் தன்னை மிகவும் கடிந்துகொள்வது உறுதி என்று போ- போ எண்ணினான். ஆகவே அவன் கவலை யுடன், எரிந்து சாம்பலாய்க் கிடக்கும் பகுதிகளில் அங்குமிங்கும் சென்று பார்த்துக் கொண்டிருந்தான். பன்றிகள் வெந்த பகுதியருகே வந்ததும், என்றுமில்லா ஒரு நறுமணம் அவன் மூக்கைத் தொளைத்தது. இதற்கு முன்னரும் அவன் சில சமயங்களில் வீடு பற்றிக் கொள்ளும்படி விட்டதுண்டு. பிற வீடுகள் எரிந்த போதும் சென்று பார்த்ததுண்டு. வீட்டுப் பகுதிகள் எரிந்ததால் ஏற்படும் மணம் அவன் அறியாததன்று. இப்போதைய மணம் அவ் வகைகளை எதிலும் ஏற்படும் மணம் அவள் அறியாததன்று. இப்போதைய மணம் அவ் வகைகள் எதிலும் சேர்ந்ததன்று என்பதை அவள் உணர்ந்தான். ஆயினும், முன்பின் அறியாத இம்மணம் எதிலிருந்து வந்ததென்பதை அவன் அறியக் கூடவில்லை.

முழுதாக இறந்து கிடந்த பன்றிகளருகில் வந்ததும், மூக்கில் மணம் தொளைத்ததுமட்டுமன்றி, நாக்கிலும் நீருறத் தொடங் கிற்று! முழுதாக வெந்த பன்றிகளும் குட்டிகளும் முற்றிலும் உருக் கெடாது கிடந்தன. அவற்றில் எதற்கேனும் உயிர் இருக்கக் கூடுமோ என்று பார்க்க எண்ணி, ஒரு பன்றியின் மீது தொட்டுப் பார்த்தான். சூடாயிருந்த அதன் தசையில் ஒரு பகுதி அவன் விரலில் ஒட்டிக் கொண்டது. கையில் வெப்பம் தாங்கமுடிய வில்லை. அதை உடனடி தணிக்கும்படி அவன் கைவிரல்களை