பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஈலியாவின் கட்டுரைகள்

(271

வாயில் வைத்தான். கைவிரல்களில் ஒட்டியிருந்த தசை அவனுக்கு இன்னதென்று கூறமுடியாத இன்சுவை உடையதாயிருந்தது. புதிய நறுமணம் எங்கிருந்து வந்தது, அதன் பொருள் என்ன என்பதை இப்போது அவன் அறிந்து கொண்டான்! இப் புதுச் சுவை உணவை மேன் மேலும் நுகரும் எண்ணங் கொண்ட வனாய், அவன் மீட்டும் மீட்டும் கொதிக்கும் தலையில் கையிட்டுச் சுவைப்பதில் ஈடுபடலானான்.

வெளியூர் சென்று திரும்பி வந்த ஹோற்றி வீட்டின் நிலை யைக் கண்டும், மகன் செயலைக் கேள்வியுற்றும், கடுஞ்சினங் கொண்டு அவனைத் தேடி வந்தான். வீடெல்லாம் எரியவிட்டுப் பொருள்களைச் சேதப்படுத்தியதுமன்றி, அவன் இன்னும் எரி பொருளில் கிண்டிக் கிளறிக் கொண்டிருப்பதைக் கண்டு கடுங் கோபங் கொண்டான். “இவ்வளவும் எரியவிட்டது போதா தென்றா, இன்னும் இங்கே கிளறிக் கொண்டிருக்கிறாய்?” என்று அவன் மகனை அதட்டினான்.புத்துணவின் புதுச்சுவையார்வத்தில் ஈடுபட்டிருந்த போ-போ அவனைக் கவனிக்கக்கூட நேரமில் லாமல், தலையைத் தொட்டுத் தொட்டு நுகர்வதில் ஆழ்ந் திருந்தான். அவன் எரிந்த பன்றியைத் தொட்டு வாயில் வைக்கும் கொடுமை கண்டு, ஹோற்றி பதைபதைத்தான். “சீ, மனிதரில் கேடுகெட்ட பதரே! என்ன, செய்யத் தகாத, கேலிக்கிடமான காரியம் செய்கிறாய்?” என்று கூறி அவனைக் கழியால் புடைத்தான்.

போ-போ இப்போது அனுபவித்த இன்பத்திடையே இவ்வடிகள் அவனுக்கு ஒரு பொருட்டாயில்லை. ஹோற்றி தன் மனங் கொண்ட மட்டும் அடித்தும், அவன் புன்முறுவலுடன், “அப்பா தாங்கள் கோபத்தில் வீண்நேரம் போக்க வேண்டாம். இந்தத் தசை எவ்வளவோ சுவையிருக்கிறது. சிறிது சுவைத்துப் பாருங்கள்!” என்றான். சீனமக்கள் எவரும் எரிந்த பிணத்தைத் தின்பவனை இழிவாகக் கருதுவர் என்று எண்ணித் தன் மகன் தகா செயலுக்கு அவன் வெட்கமடைந்ததன்றித் தானும் அதில் ஈடுப எண்ணவில்லை. ஆனால், மகன் கையை அதிலிருந்து வலிந்து தள்ளும்போது பன்றியின் இறைச்சியில் அவன் கைபட்டுப் பொள்ளிவிட, அவன் எரிவு தணிக்க அதனை வாயில் வைக்க வேண்டியதாயிற்று. அப்போதுதான் போ- போவின் அறிவை