ஈலியாவின் கட்டுரைகள்
(273
சான்னதையும், தலைவர் அதனை அட்டியின்றி ஏற்றதையும் கேட்டுத் திகைப்புற்றனர்.
குற்றவாளிகள் விடுதலையடைந்த பின் மக்கள் மனத்தினுள் பல ஐயங்கள் பின்னும் வலியுறவு பெற்றன. மன்றத் தலைவர் புதிதுபுதிதாக வீடுகள் கட்டினார். ஒவ்வொரு வீடும் சில நாளில் எரிந்து சாம்பலாயிற்று. ஆனால், அவர் சிறிதும் தயங்காமல் புது வீடுகள் கட்டி வரலானார். சான்றாளர்கள் வீடுகளும் அடிக்கடித் தீப்பற்றின. நாளடைவில் இத் தீக்கொளுத்தி இரகசியம் எங்கும் பரவவே, வீடுகள் எங்கும் எரியத் தொடங்கின. வீடு கட்டும் கொத்தர்களும் காலப் போக்கறிந்து எளிதில் எரியத்தக்கதும், மிகுதி விலை பிடிக்காததுமான பொறியான வீடுகள் கட்டத் தொடங்கினர். இதனால் சீன நாகரிகத்திலேயே பெருமாறுதல் ஏற்பட்டது. கட்டத் தொழில் கெட்டு அக்கலை சீரழிந்தது. தீயணைப்புக் கருவிகள் யாரும் வாங்குவாரில்லை. திருடர் காப்பகங்களும் தம் தொழில் இனி யாரும் வாங்குவாரில்லை. திருடர் காப்பகங்களும் தம் தொழில் இனி நடைபெறாதென ஒன்றொன்றாக மூடின. பன்றி விலையும் எரிபொருள் விலையும் மலை மலையாக ஏறின.
இங்ஙனமாகச் சமைப்புத் தொழில் வீட்டுக்குத் தீவைக்கும் தொழிலாக நெடுநாள் வளர்ச்சி யடைந்தது. 'இறைச்சி பதம் பண்ண ஒரு முழு வீட்டையும் எரிக்கத் தேவையில்லை. ஒரு சிறு அடுப்பினுள் சில கட்டைகள் எரிந்தால் போதும்' என்று காண மனித வகுப்புக்கு நீண்ட நாள் பிடித்தது. அப்படிப்பினை ஏற்படுமுன், அதற்காக மேற்கொள்ளப்பட்ட படிகளும் பல பல. முதலில் அக்கால அறிஞர்கள் இச் செயலுக்கு வாழ்குடி வீட்டை எரிக்க வேண்டாம்; அதற்கெனத் தனி வீடு கட்டலாம் என்று கூறி அழிவைக் குறைத்தனர். வரவர அவ் வீடுகள் சிறுகின. இறுதியில் வாழ்குடி வீடுகள் தீப்பற்றாத பொருள்களாலும் எரி வீடுகள் பாதுகாப்பான சிறு இடத்துக்குட் பட்டும் கட்டப்பட்டன. அன்றைய எரி வீடுகளே பலபடியான வளர்ச்சியின் பயனாக ன்றைய நம் அடிசிற்களங்களாக மாறியுள்ளன. பண்டைக்கால ஆராய்ச்சி அறிஞர்கள் பலர் செய்த முன்னேற்றத்தின் பயனாகவே இன்று நம் வாழ்வில் மிகப் பொதுப்படைச் செய்தியாய்விட்ட சமையற்கட்டும் சமையற் கலையும் உருவாயின.