74
அப்பாத்துரையம் - 27
கடிதம் 26
அரசியலும் அரசியல் தலைவரும்
(தகைத்திரு. ஹென்ரி ஸெய்மூர் கான்வேக்கு
அன்புகெழுமிய ஹாரி,
ஆர்லிங்டன் தெரு. ஜூன் 29, 1744
என் முந்திய கடிதம் வந்துசேர ஏன் அவ்வளவு சுணங்கிற்று என்பதை அறியமுடியவில்லை. ஏனெனில், உங்கள் கடிதம் எனக்கு மிக விரைவில் கிடைத்துவிட்டது. அஞ்சல் நிலையப் பரிசீல னையினால் சுணக்கமாயிற்று என்று கூறுதல் பொருந்தாது. அரசியலின் துறையில் அத்தகைய மனப்பான்மை இருந்ததென்று என்னால் நினைக்க முடியவில்லை - இருந்தால் இறைவன்தான் நம்மைக் காக்கவேண்டும். ஈட்டனில் நான் படிக்கும்போது கூடக் கட்டாயமாகப் படிக்கவேண்டிய பாடத்திட்டங்களுக்கு மேற்பட்டு திரு.ப்ளாண்ட் மிகுதிப்படியான படிப்பு வேலை கொடுத்த போது நான் மறுத்துவிட்டேன்.உள்ளதைப் படிப்பதே நம் அறிவு நிலைக்கு மேற்பட்ட...ஆகவே, ஒன்றும் தேவைக்கு மேல் சிந்தனைக்கு நான் டம் கொடுப்பதில்லை. அந்த அளவு நான் அறிவற்றவன் என்று கூட ஒப்புக்கொள்ளத் தயங்குவ தில்லை.
இங்ஙனம் கூறும்போது நான் எங்கேனும் எவரையேனும் மறை முகமாகத் தாக்குவதாக நீங்கள் எண்ணிவிட வேண்டாம். அப்படி நீங்கள் எண்ணிவிடக்கூடாது என்பதற்காகவே எனக்குக் கிட்டிய ஒரு புதிய கவிதையின் சில வரிகளைக் கீழே தருகிறேன். எழுதுபவர் அது முற்றிலும் ஒரு சார்பற்றதென்றே வலியுறுத்தி யுள்ளார். எனினும் அது தற்போதைய அமைச்சவையில் ஒருவரால் எழுதப்பட்டதென்பது தெளிவாகக் காணப்படும். அது 'போப்' எழுதியது என்ற முறையில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், நான் குறிக்கும் பகுதி தவிர மீந்தவை மிகவும் கீழ்த்தரத்