பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

83

முன்னோர்கள் நூலாகமட்டும் கொள்ளும் நாங்கள், அதனைப் பழிக்காமல் அதன் பெயரால் நடைபெறும் தீமைகளையே பழிக்கிறோம்.

நீலகேசியின் சொற்கள் பூதிகன் உள்ளத்திலும், அவன் மாணவர் உள்ளத்திலும் பதிந்து அவர்களைத் திருத்தின. அவர்கள் கொல்லாநெறி மேற்கொண்டு அப்பழ அறநெறி யில் நிற்கத் தொடங்கினர்.

பிரிவு 10. பூதவாதம்

வேதவாதியை வென்று நீலகேசி வெற்றிகரமாகத் திரும்பிவரும் வழியில், உலோகாயத (அனாத்மநாஸ்திக) நெறியாகிய பூதவாதத்தின் பேர்போன தலைவனான பிசாசகனைச் சந்தித்தாள். அவன் மதனஜி தனென்ற அரசன் ஆதரவுபெற்று அவன் அரண்மனையிலிருந்தான். எனவே, அவ் அரசன் அவையிலேயே வாதம் தொடங்கிற்று. (இந் நெறியின் முதல்வன் சார்வாகனாதலால் இது சார்வாகம் எனவும் பெயர்பெறும்.)

பூதவாதத்தின் அடிப்படைக் கொள்கைகள் யாவை என்று நீலகேசி வினவ, பிசாசகன் அதை விளக்கிக் கூறலானான்.

பிசாசகன்: பொருள்வேறு, பண்பு வேறு என்ற மயி ரிழைப் பாகுபாடுகளை நாங்கள் ஏற்பதில்லை. எங்களுக்கு அடிப்படை உண்மைகளாவன ஐந்து பூதங்களே. உலக நடை முறைகள் எல்லாம் அவற்றினிடமிருந்தே தோன்றி இயங்குபவை. அனல், மண், நீர், காற்று, வெளி என்ற இவ்வைந்து பூதங்களும் நிலையாயன; மெய்ம்மைகள், இவற்றிலிருந்து முறையே கண்கள், மூக்கு, நாக்கு, உடல், காதுகள் ஆகிய பொறிகள் தோற்றுகின்றன. அவற்றினிடமிருந்து நிறம், மணம், சுவை, ஊறு, ஓசை ஆகிய புல ணுணர்வுகள் எழுகின்றன. மா, வெல்லம் முதலாய ஐம் பொருட்களின் சேர்க்கையால் வெறிதரும் சாராயம் உண் டாவதுபோலவே, இவ் ஐந்தின் சேர்க்கையால் அறிவு தோற்ற மெய்துகின்றது. அதனிடமாக இன்ப துன்பமுண்டாய், ஐம்பூதங்களின் செறிவுக்கியைய வளர்ச்சியுற்று வேறுபட்டுப் பிரிந்தொழிதலால் இவையனைத்தும் அழிவுறுகின்றன.