பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

அப்பாத்துரையம் - 28

உயிர் என்ற ஒன்று இல்லை. சூழ்ச்சிமிக்கவர் கற்பனை

யில் தோன்றிய இப்பொய்ம்மையை அறிவற்ற ஆயிர மாயிரமக்கள் நம்பி ஏமாறுகின்றனர். முக்காலத்தும் உயிர் என்ற பொருள் இல்லை; இருப்பவை, இருந்தவை, இருக்கப் போகின்றவை எல்லாம் ஐம்பூதங்களே.

நீலகேசி: உங்கள் முடிந்த உண்மையை நீங்கள் கண்டறிந்த வகை யாது? புலனுணர்வாலறிந்தீர்களா? உய்த்தணர்வாலா? அல்லது நிறையறிவுடைய உங்கள் தலைவர் அறிவாலா? உங்கள் சமயத்தைத் தோற்றுவித்த முதல்வர்யாருமில்லாததால், அதற்கு வாய்மொழியும் இருக்க முடியாது. நிறையறிவுடைய முதல்வர் மட்டுமே வாய்மொழி போன்ற நிறை அறிவுரை தரமுடியும். வினைசார் பற்ற அத்தகைய முதல்வரக்கு உங்கள் கோட்பாட்டிலும் இடமிருக்க முடியாது. நீங்கள் ஏற்கும் அளவை கண்கூடு (புலனறிவு) ஒன்றே. அதன் வாயிலாய் புலனறிவுக்கு மூலமான உடல், அதற்கு மூலமான முடிந்த உண்மைகள் ஆகியவற்றை அறிவதெவ்வாறு? பூதங்கள் ஒன்று சேர்வதால் புதிதான உயிர்த் தன்மையுடைய அறிவு தோன்றுவதெவ்வாறு? பூதங்கள் முதற்காரணமா, (மூலப் பொருளா), நிமித்தகாரணமா (செய்வோனா)? முதல் காரண மானால், புலனன்றி அறிவும் உணர்வும் தோன்றுமா?

பிசாசகன்: விறகிலிருந்து தீ தோன்றுவது போலவே தான் புலன்களிலிருந்து உணர்வும்.

நீலகேசி: விறகில் தோன்றும் தீ, விறகைப்போலவே உணர்வற்றது. விறகுடன் எரிந்து அதனுடன் ஒழிவதேயன்றித் தன்செயலாக எதுவும் உடையதன்று. பூதங்கள் சேர்க்கையில் உயிர் தோன்றுவது அவ்வாறன்று. பூதங்கள் அறிவும் உணர்வும் அற்றவையாயினும் உயிர் அவற்றை உடையது. அப்படியிருக்க, பூதங்களிலிருந்து உயிர் எவ்வாறு தோன்றும்?

மேலும் விறகு மிகுதிப்பட்டால் தீ வளரும், ஆனால் உடல் வளர்ச்சியுடன் உணர்ச்சி வளர்ச்சியடைவதில்லையே. பூதச் சேர்க்கையாலுண்டாகும் புலனறிவு, பூதச் சார்பான பொருள் களை உணர்ந்தும் உயிர், உணர்வு, அறிவு ஆகியவற்றை உணர்வதில்லை.