பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

85

நலவினை உணர்வு, தீவினையச்சம், அகச்சான்று ஆகியவைகள் புலனுடன் தொடர்பற்றவை.

ஐம்பூதங்கள் சேர்க்கையால் அறிவு உண்டாகும் என்கி றீர்கள். அனால் புலன்கள் அவ்வப்பொறிகள் வாயிலாக மட்டும் அறியப்படுவானேன்? மைபொறிகளுள் சிலபொறிகளே உடைய கீழுயிர்கள் ஐம்பூதங்களில் சில பூதங்கள் குறைய உண்டானவையா? சில பூதங்கள் குறைந்தும் ஒரு பூதமே தனித்தும் புலனறிவுண்டாமெனில், ஐம்பூதமும் ஐம்பொறியும் சேர்ந்தே அறிவுண்டாமெனும் கோட்பாடு வீழ்ச்சியுறுகின்றது. இவற்றுக்கும் மேலாகப் பொருளுண்டெனின், ஆன்மாவை ஒப்புக்கொண்டாகவேண்டும்.

பூதங்கள், புலனுணர்வு இல்லாதபோது முன்நினைவு ஏற்படுகிறதே. மனம் என்ற ஒன்றின்றி அது எவ்வாறு ஏற்படும்? பசி, சினம், அவா, சிற்றின்பம் ஆகியவை புலனுணர்வி லடங்குபவை அல்லவே? சிறு குழந்தை அழுவது, பால் குடிக்க முனைவது எவ்வறிவின்பாற்படும்? இவை இயற்கையானால், அவை வளர்ச்சிப் பருவந்தோறும் மாறுபடுவானேன்? உயிர்வகை தோறும் வேறுபடுவானேன்?

உயிர்கள் உணர்விழந்த நிலையில் புலனுணர்வில்லா மலும் உயிர் நிலவுகிறதே. புலனுணர்வு கடந்த உயிர் இருக்க வேண்டுமன்றோ? உடலில் பூதச் சேர்க்கை அழியாமலே உயிர் போவதெவ்வாறு?

பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உயிர் இல்லை. அவ்வுணர்வு இல்லாததனால் என்கிறீர்கள். பிறப்புக்கு முன்னும் இறப்புக்கு பின்னும் பூத உணர்வில்லாததால் பூதங்களுமில்லை என்று கொள்ளலாமா?

ஒரேவகை உடலுடைய உயிர்கள் பலபடி அறிவு, பல்வகை அறிவு நிலை, இன்பதுன்ப நுகர்வு உடையவையாயிருப்பானேன்?

பொருள் சேமித்துப் புதைத்துவைத்து இறந்தவன் பிள்ளைக்கு இடமறிவிக்கும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கு ஏற்படுகின்றனவே? இறப்புக்குப்பின் உயிர் இல்லை என்றால், இது எவ்வாறு கூடும்?