பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

அப்பாத்துரையம் - 28

பிசாசகன்: (விலாப்புடைக்க நகைத்து) புலனாலறியப் படாதவை பொய்யாகும். பொய்யைப்பற்றி ஏன் இவ்வளவு மயிரிழை ஆராய்ச்சி!

நீலகேசி: ஆவியை நம்பாத உனக்கு நேரிடையாக ஆவியைக் காட்டுகிறேன் என்று கூறித் தன்தெய்வ ஆற்றலால் பிசாசகன் முன் ஒரு பேய் வடிவுடன் தோன்றினாள். பிசாசகன் அஞ்சி உணர்வற்று நின்றான். நீலகேசி அவனைத் தேற்றி, அஞ்சவேண்டாம். இது உன் தாயுருவம்; வேறன்று. நீ பிசாசகன் என்று பெயர்பெற்றதே அதனால்தான்! என்றான்.

பிசாசகன் நீலகேசியின் அறநெறி ஏறினான். நீலகேசி யும் தன் அறப்பணியால் மனநிறைவடைந்து தன் அறிவு நிலையில் நின்று வீடுபேறுற்றாள்.

முற்றும்