பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

L

91

களையும் வேறு பிரித்துக் காட்டின. மைபூசிய வண்ணத் தூண்களும் வெண்பித்தளைப் பிடிகளுடன் பூவேலைப்பாடுகள் அமைந்த நிலைக் கதவுகளும் வெள்ளி, பொன் கலங்களும் அவன் ஏழ்மையை எள்ளி நகையாடின. வான்முகடென உயர்ந்த மேற்கட்டுக்களும் வளைவுகளும் அவனை அண்ணாந்து பார்க்க வைத்தன.

சிறுவன் தம் வீட்டையும் வீட்டுப் பொருள்களையும் கவனித்துப் பார்த்து வருவது கண்டு திரு மெர்ட்டனும் திருவாட்டி மெர்ட்டனும் மகிழ்ச்சியுடன் அவனையே நோக்கி யிருந்தனர். ஆனால் அவர்கள் அவன் முகத்தில் எதிர்பார்த்த மகிழ்ச்சியார்வத்தையோ வியப்பையோ அதில் காணவில்லை. அவற்றைப் பாராட்டியோ வியந்தோ அவன் வாய்திறந்து எதுவும் கூறவும் இல்லை; கேட்கவும் இல்லை. எதிர்பாரா இக்காட்சிகளால் அவன் உணர்ச்சிகள் அனைத்தும் அதிர்ச்சியுற்றுப் போயிருக்க வேண்டும் என்று அவர்கள் மதித்தனர்.

ஆனால் உணவு மேடையில் அவன் வெளியிட் கருத்துக்கள் இவ்வெண்ணத்தை அகற்றின. அவன் எண் ணயிடையே தண்ணீர்த் துளிபோல் பற்றற்றவனாய் நடந்துகொண்டது புறச்சூழ்நிலையின் புதுமை காரணமாக மட்டுமன்றி. அவன் உள்ளக் கருத்துக்களும் மற்ற மக்கள் கருத்துக்களிடையே எண்ணெயுள் தண்ணீர் போலத் தனிப் பட்டதாகவே இருந்தன என்பதைக் கண்டனர்.

உண்ணுமுன் ரு வெள்ளிக்கிண்ணியின் வேலைப் பாட்டில் சிறுவன் சிறிது ஈடுபட்டுக் கவனித்ததாகத் திருவாட்டி மெர்ட்டனுக்குத் தோன்றிற்று. உடனே அவள் சிறுவனை நோக்கி “தம்பி, இது நல்ல வேலைப்பாடமைந்த சிறு கிண்ணிதான். இது எங்கள் டாமியினுடைய கிண்ணி. அவன் வேறுயாரையும் இதைத் தொடவிடமாட்டான். ஆனால் இது உனக்குப் பிடித்தமாக இருந்தால் அவன் இதை மகிழ்ச்சியுடன் உனக்குப் பரிசாகக் கொடுப்பான் என்று நான் அறிவேன். ஏன் டாமி! நீ என்ன சொல்லுகிறாய்" என்று கூறி டாமியை நோக்கினாள்.

L

டாமியும் "ஆம் அம்மா, நான் ஹாரிக்கு எதையும் மகிழ்ச்சியுடன் கொடுப்பேன். எனக்கு வேறு தங்கக்