பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

95

ஹாரியின் தந்தை ஸான்ட்போர்டு இதற்கு நேர்மாறாக முற்றிலும் ஏழைக் குடியானவர். அவர் வயலில் உழைத்துக் காடுகளில் விறகு வெட்டியும், ஏளமாட்டா வறுமையுடன் காலந்தள்ளி வந்தார். சிறு பருவத்திலிருந்தே ஹாரி தாய்க்கு வீட்டில் வேண்டிய உதவி செய்வதுடன் தந்தையுடன் சென்று அவருக்கு உதவி செய்யவும் பழகியிருந்தான். எதையும் தூய்மையுடனும் ஒழுங்குடனும் பேணும் பழக்கத்தை அவன் தாய் அவனுக்கு ஊட்டியிருந்தாள். வயலில் தந்தையுடன் ஒத்துழைத்து அவன் நல்ல உடற்கட்டும் உழைப்பாற்றலும் உடையவனா யிருந்தான். அடிக்கடி தந்தையையும் மாமனையும் பார்க்கக் காட்டு வழிகளில் அவன் செல்ல வேண்டி வந்தது. தந்தையுடனும் தனியாகவும் இடர்களைச் சமாளித்துக் காடுகளில் சென்று வந்ததால், அவனிடம் வீரமும் குடி கொண்டிருந்தது. ஆனால் அவனுக்குப் படிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்காமலிருந்தது.

ஹாரியின் இயற்கை அறிவையும் அதன் வளர்ச்சி யையும் ஊன்றிக் கவனித்த அவ்வூர் ஓதுவார் திரு பார்லோ ஒருநாள் திரு ஸாண்ட்போர்டிடம் பேசுகையில் “ஐயா, எந்தப் பிள்ளைகளையும் கல்வி யில்லாமல் வளர்க்கக்கூடாது. அதிலும் ஹாரிபோல இயற்கையறிவும் ஆற்றலும் உள்ள பையனைப் படிப்பிக்காமலிருப்பது சரியல்ல" என்று கூறினார்.

ஸாண்ட்போர்டு “ஏழைகளாகிய எங்களுக்கு அதற் கான வாய்ப்பு ஏது? இப்பக்கத்திலோ பள்ளிகள் இல்லை. தொலைக்கு, அனுப்ப எங்களால் முடியாது. தவிர வாழ்க்கைக்கே வழியில்லாமல் வறுமைக் குழியில் புரளும் நாங்கள் பிள்ளைகளை எங்ஙனம் படிக்க வைக்க முடியும்? சிறுபிள்ளைகளாயி ருக் கிறார்களே என்று கூடக் கருத இடமின்றி நாங்கள் அவர்களை உழைக்கவிட வேண்டியிருக்கிறதே" என்றார்.

66

இது கேட்டுத் திரு பார்லோ சிறிது பெருமூச்சு விட்டு 'ஐயா, ஹாரியின் கல்வியைப் பற்றியவரை தங்கட்குக் கவலை வேண்டாம்.அவனுக்கு வேண்டிய எல்லாக் கல்விப் பயிற்சியையும் அதனுடன் வேண்டிய தேவைகள் யாவற்றையும் நானே பார்த்துக் கொள்கிறேன். அவனுக்கு வீட்டில் வேலையுள்ள நேரம் தவிர மற்றச் சமயங்களில் என் வீட்டிலேயே இருக்கட்டும்” என்றார். திரு ஸாண்ட்போர்டு இதனை மனமுவந்து ஏற்று அவருக்கு