பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

அப்பாத்துரையம் - 28

எல்லையிலா நன்றியும் கடப்பாடும் தெரிவித்தார். அன்று முதல் ஹாரி ஸாண்ட்போர்டு தன் வீட்டில் தேவைப்பட்ட வேலை களைச் செய்தும் ஓய்ந்த நேரங்களில் ஆசிரியர் வீட்டிலிருந்து பயின்றும் வந்தான்.

L

ஹாரி திரு மெர்ட்டன் மாளிகைக்குச் சென்றதற்கு முந்திய நாள் காலை நேரங்களில் டாமி ஒரு பணிப் பெண்ணுடன் ஊர்ப்புறத்தே உலாவச் சென்றிருந்தான். அவர்கள் ஒரு செடி யண்டை மலர் பறித்துக் கொண்டிருக்கையில், புதரிடையிலிருந்து ஒரு பாம்பு வந்து அவன் காலைச் சுற்றிக் கொண்டது. அதையறிந்த டாமி அச்சமும் திகிலும் கொண்டு விழித்தான். அவன் திகில் கண்டு என்ன செய்தி என்று பணிப்பெண் வினவினாள். அவன் அதற்குக் காலைநோக்கிக் குறிப்புக்காட்ட மட்டுமே முடிந்தது. அவளும் காலில் பாம்பைக் கண்டு கலவர மடைந்து இன்னது செய்வதென்றறியாது திகைத்தான். பின் அவள் வேலையாட்களைக் கூட்டிவர வீட்டுக்கே ஓடினாள். பாவம், டாமி ஓடவும் முடியாமல், நிற்கவும் மனமின்றித் துடியாய்த் துடித்தான்.

இச்சமயம் அப்பக்கமாக வந்த ஹாரி ஒரு நொடியில் நிலையை உய்த்துணர்ந்தான். அவன் உடனே குனிந்து, சட்டெனப் பாம்பின் கழுத்தைப் பிடித்து, அதை வெளியே இழுத்து வீசியெறிந்தான். டாமிக்கு இப்போது தான் உயிர் வந்தது. அவன் ஹாரியைக் கழுத்தோடு அணைத்துக் கொண்டு அழத் தொடங்கினான்.

இதற்குள் பணிப்பெண்ணின் அலறல் கேட்டு வேலையாட்களும் திருவாட்டி மெர்ட்டனும் ஓடி வந்தனர். டாமியிடமிருந்து இடர்நீங்கிய வகையறிந்ததும் அனைவரும் ஹாரியைப் பாராட்டினர். திருவாட்டி மெர்ட்டன் ‘அப்பா, இன்று முதல் நீ என் குழந்தை. நீ கட்டாயம் என் வீட்டுக்கு வந்து தங்கிப் போக வேண்டும். எங்கள் பிள்ளையாகவே நீ இருந்தால் கூட எங்களுக்கு மகிழ்ச்சியே' என்றாள்.

ஹாரி "அம்மா, நான் உங்களுக்கென எதுவும் செய்து விடவில்லை. இடுக்கண் வந்தால் யாரும் யாருக்கும் உதவ வேண்டுவது தானே. நீங்கள் அன்புடையவர்களாதலால் இதைப் பெரிதுபடுத்துகிறீர்கள். நான் இனி வீட்டுக்குப் போகவேண்டும்