பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. டாமியின் பயிற்சித் தொடக்கம்

ம்

ஓதுவார் திரு. பார்லோ இயற்கையிலேயே நல்லொழுக் கமும் நாட்டுப்பற்றும் மக்கட்பற்றும் உடையவர். இம் மூன்றும் சேர்ந்த சமூகத் தொண்டே தெய்வபக்தி என்பதை அவர் உணர்ந்தவர். ஹாரி இயற்கையிலேயே நல்ல உழைப்பாளி. ஆனால் திரு பார்லோவின் அறிவுரை மூலமும் அவர் வழி நின்றதன் மூலமும் அவன் உழைப்பாற்றல் உழைப்பார்வத்தால் பன்மடங்கு வளம் பெற்றது. அத்துடன் அவர் அவனுக்கு எழுத்துவாசிப்பு, கணக்கு முதலிய பள்ளிப்படிப்பறிவையும்; வாழ்க்கைக்குத் தேவைப்படும் மற்றெல்லா வகைப் பயிற்சி களையும் ஒருங்கே ஊட்டி வந்தார், இங்ஙனம் அவன் கல்விப் பயிற்சி வெறும் பள்ளிப் பயிற்சியாயிராமல் ஒரு நல்ல குடும்பப் பயிற்சி, ஒரு நல்ல பள்ளிப்பயிற்சி, ஒரு நல்ல வாழ்க்கைப்பயிற்சி ஆகிய மூன்று பகுதிகளும் நிறைந்த முழுநிறை சமூகக் கல்விப் பயிற்சியாய் அமைந்தது.

திரு. பார்லோவின் வாழ்க்கைப் பயிற்சி முறையில் ஒரு முழுமையான வாழ்க்கைத் தத்துவமே அடங்கியிருந்தது. அன்பு, தற்சார்பு, தன்மதிப்பு ஆகிய மூன்று பண்புகளும் அதன் அடிப்படைக் கூறுகளாயிருந்தன. மக்கள் யாரிடமும் வகுப்பு, குடி, குல வேற்றுமை பாராட்டக் கூடாது என்பதும்; விலங்குகள், பறவைகள் முதலிய உயிரினங்களைக் கூடக் கூடியமட்டும் கொல்லவோ துன்புறுத்தவோ கூடாதென்பதும்; ஒருவருக்கு இடுக்கண் நேர்ந்தால், எவரும் அவருக்கு உதவாதிருத்தல் கூடாதென்பதும்; தன்னுழைப்பாலேயே தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதும்; உழைப்பவர்களை இழிவாகக் கருதக் கூடாது என்பதும்; எவரையும் அவமதிக்கவோ எவர்க்கும் அஞ்சி நடக்கவோ கூடாது என்பதும்; தன் மதிப்பையும் தன் நேர்மையையும் உயிரினும் மேலாகக் கருதவேண்டும் என்பதும்;