பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(100

||-

அப்பாத்துரையம் - 28

செயலும் அவனிடம் இரண்டாந்தர இயற்கைப் பண்புகளாய்ப் போய்விட்டன. தாய் தந்தையரும் பிறரும் அவன் கேட்டதை யெல்லாம் தந்தனராதலால், பிடிவாதமும் அடம்பிடித்தலும் அவனிடம் பெருகின. எனவே தற்பெருமை, வீம்பு, குடும்பப் பெருமை, வகுப்பிறுமாப்பு, சோம்பல், இரக்கமின்மை, அன்பின்மை, கோழைத்தனம் ஆகிய பல தீயகுணங்களும் பழக்கங்களும் அவன் உள்ளத்தை மூடி மாசடைய வைத்திருந்தன. சுருங்கச் சொன்னால், கொடுமையே அவன் அறநெறியாகவும், சோம்பலே அவன் பொருள் நெறியாகவும் தன்னலமே அவன் ன்ப நெறியாகவும் அமைந்திருந்தன.

ரு பார்லோ உலக அறிவு மட்டுமன்றி மக்கள் உளப் பாங்கும் அறிந்தவர். ஆகவே திரு மெர்ட்டன் மாளிகையில் சென்று டாமியைக் கண்டதுமே அவர் அவன் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் படிமானங்களையும் உய்த்துணர்ந்து கொண்டார். இவற்றை மாற்றியமைப்பது அருமை என்பது அவருக்குத் தெரியும். ஆனால் மாற்றியமைக்க முடியும் என்றும் அவர் உறுதியாக நம்பினார். எனினும் திரு மெர்ட்டன் உண்மை யிலேயே அவற்றை மாற்றியமைக்க எண்ணுகிறாரா என்றறிய அவர் ஆவல் கொண்டார். ஆகவே அவர் திரு மெர்ட்டனிடம் "தங்கள் சிறுவன் செல்வத்துட் பிறந்து செல்வ வாழ்வு வாழப் பழகியவன்.எங்கள் வீட்டிலிருந்து கடுமை வாய்ந்த எங்கள் எளிய வாழ்க்கையை அவன் எப்படித் தாங்குவான்?” என்று கேட்டார்.

திரு மெர்ட்டன், “தாங்கள் கூறுவது உண்மையே. ஆனால் வேண்டுமென்றேதான் நான் அவன் சூழ்நிலையை மாற்ற எண்ணுகிறேன். வெள்ளை முதலாளிகளும் கறுப்பு அடிமை களுமே நிறைந்த ஜமெய்க்காவில் நான் விரும்பும் சூழ்நிலையிருக்க முடியாது." ஆகவேதான் நான் அவனைக் கல்விக்காக இங்கிலாந்துக்குக் கொண்டு வந்திருக்கிறேன். அவனை இங்கும் பொதுப் பள்ளிக்கு அனுப்புவதனால் நான் விரும்பும் பயன் முற்றிலும் ஏற்படாது. குடும்ப வாழ்வின் சூழலிலேயே இந் நாட்டிலும் வகுப்பு வேறுபாட்டுப் பண்பாடும் வகுப்பு வேறுபாட்டுணர்ச்சியும் வேரூன்றி விடுகின்றன. பொதுப் பள்ளிகள் இவற்றை அகற்றத்தக்க ஆற்றலுடையவையாயில்லை.