வாழ்வாங்கு வாழ்தல்
101
தங்கள் வசமிருந்து கல்வி பெற்ற ஹாரியிடம் நீங்கள் அவன் வகுப்பிற்கு உரிய அடிமை யுணர்ச்சியை முற்றிலும் அகற்றி, அவனுக்கு உயரிய வாழ்க்கைப் பண்பை ஊட்டியுள்ளீர்கள். எனவே என் சிறுவனுக்கும் அவன் வகுப்பிற்குரிய அடக்குமுறை உணர்ச்சியையும் ஆதிக்க மனப்பான்மையையும் அகற்றி, அதே உயர் பண்பை வளர்த்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. ஆகவே எவ்வகையான தட்டுதடங்கலும் மயக்க தயக்கமுமின்றி அவனைத் தங்கள் பொறுப்பில் விட்டுவிட ஒருப்பட்டுள்ளேன். நாங்கள் தங்கள் விருப்பப்படி எத்தகைய முறைகளையேனும் கையாண்டு அவனை வழிக்குக் கொண்டு வரக் கோருகிறேன்" என்றார்.
L
திரு மெர்ட்டனின் மனப்போக்கறிந்தபின் திருபார்லோ டாமியின் கல்விப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மறுநாளே டாமி ஹாரியுடன் திருபார்லோவின் இல்லம் வந்து சேர்ந்தான். அவன் பயிற்சி முறையும் மறுநாளே தொடங்கிற்று.